கோவில் 541 - மதுரை திருமங்கலம் குமரன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-541
திருமண பாக்கியம் அருளும் மதுரை திருமங்கலம் குமரன் கோவில்
1.12.2022 வியாழன்
அருள்மிகு குமரன் திருக்கோவில்
திருமங்கலம்-625706
மதுரை மாவட்டம்
இருப்பிடம்: மதுரை 25 கிமீ, திருமங்கலம் பேருந்து நிலையம் 1.2 கிமீ
மூலவர்: குமரன்
தேவியர்: வள்ளி, தெய்வானை
உற்சவர்: தெய்வானை நாதர்
தல விருட்சம்: வில்வ மரம்
தீர்த்தம்: குண்டாறு
புராணப்பெயர்: திருமாங்கல்யபுரம்
தலமகிமை:
.மதுரை-விருதுநகர் சாலையில் 25 கிமீ தொலைவில் குண்டாறு நதிக்கரையில் திருமண பாக்கியம் அருளும் திருமங்கலம் குமரன் கோவில் அமைந்துள்ளது. திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கோவில் தூரம் 1.2 கிமீ ஆகும். கோவிலுக்கு அருகில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் சொக்கநாதர் கோவில் மற்றும் காட்டு பத்திரகாளி அம்மன் கோவில்கள் இருப்பது சிறப்பு.
இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா மிக சிறப்பாக நடைபெறுகிறது. சிறப்பு மிக்க சூரசம்ஹார நிகழ்வினை காண ஏராளமான பக்தர்கள் கலந்து குமரன் அருளை பெற்று செல்கின்றனர். இது போல திருக்கார்த்திகை தீபத்திருநாளன்று சொக்கப்பனை கொளுத்துதல் மிகப் பெரிய விழாவாகும், கிருத்திகை மற்றும் முருகனின் அனைத்து திருவிழாக்களும் மிக விமரிசையாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக்கோவில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாகும். இக்கோவிலிலும், அருகில் உள்ள மீனாட்சி அம்மன் சொக்கநாதர் கோவில் மற்றும் காட்டு பத்திரகாளி அம்மன் கோவில்களிலும் பாண்டிய மன்னர்களின் இரட்டை கயல் (மீன்) சின்னங்கள் மற்றும் செண்டு எனும் பாண்டிய மன்னர்களின் குலச்சின்னமாகிய ஆடு மேய்ப்பவர்களின் துரட்டி சின்னம் காணணப்படுகின்றன.
தல அமைப்பு:
திருகோவில் கோபுரம் நுழைந்தவுடன் கொடிக்கம்பம் காணப்படுகிறது. அடுத்து உள்ள மண்டபத்தில் வடக்கு பகுதியில் இரட்டை கயல் சின்னம் காணப்படுகிறது. கருவறையில் முருகப்பெருமான், குமரன் என்ற திருப்பெயரில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எதிரில் மயில் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளன. மேலும் விநாயகர், சிவன், அம்பாள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள் தனி சந்ந்டிகளில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம், கிருத்திகை, சஷ்டி,
பிரார்த்தனை:
திருமண பாக்கியம், தீவினைகள் அகல, நினைத்தது நிறைவேற, மன அமைதி பெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 5.30-10.30 மாலை 5.30-8.30
தீவினைகளை அகற்றும் மதுரை திருமங்கலம் குமரனை மனமுருகி கும்பிட்டு மகிழ்வோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 541 திருமண பாக்கியம் அருளும் மதுரை திருமங்கலம் குமரன் கோவில்
படம் 2 - 541 தீவினைகளை அகற்றும் மதுரை திருமங்கலம் குமரனின் சூரசம்ஹாரம்
Comments
Post a Comment