கோவில் 172 - சென்னை மேற்கு சைதாப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

 🙏🙏                                                                                                                                                                   

தினம் ஒரு முருகன் ஆலயம்-172

சகோதரர்கள் உரசல்களை நீக்கி ஒற்றுமையுடன் வாழ அருளும் சென்னை மேற்கு சைதாப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

27.11.21 சனி


அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் 

மேற்கு சைதாப்பேட்டை 

சென்னை-600015 

இருப்பிடம்: கோயம்பேடு/சென்னை சென்ட்ரல்/எழும்பூர் - சுமார் 10 கிமீ


மூலவர்: சிவசுப்ரமணிய சுவாமி 

உற்சவர்: தேவியருடன் முருகப்பெருமான்


தலமகிமை:

சென்னை மாநகரின் மையப்பகுதியான மேற்கு சைதாப்பேட்டையில் சிவசுப்ரமணிய சுவாமி

பக்தர்கள் தங்களது சகோதர பகை நீங்க,  வீடு, நிலப்பிரச்சனைகள் நீங்க, திருமணத் தடைகள் நீங்க வழிபட்டு செல்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் உப்பு மிளகு காணிக்கை செலுத்தியும், வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தும், அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம் சார்த்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். 


செங்குந்தர் சமூகத்தவரால் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட ஆலயம். இன்று வரை அவர்களாலேயே பராமரிக்கப்பட்டு வருவதால், இப்பகுதிக்கு செங்குந்தர் தோட்டம் என்று பெயர் வந்ததாம். துவக்கத்தில் முருகப்பெருமான் சந்நிதியுடன் மட்டுமே திகழ்ந்த ஆலயம். பிற்காலத்தில் பெரிய ஆலயமாக விளங்குகிறது


தலவரலாறு:

செங்குந்தர் சமூகத்தவரால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம். சுமார் நூறு வருடங்களுக்கு முன், ஒருநாள் நள்ளிரவில் கோவிலுக்குள் திருடன் ஒருவன் நுழைந்துவிட்டான். முருகப்பெருமானின் நகைகளைத் திருடும் நோக்கில், சுவாமியின் திருமேனியில் கை வைத்த உடன் அவனது பார்வை பறிபோனது. அந்தத் திருடன் கதறினான். அதற்குள் விஷயம் அறிந்து பொதுமக்களும் பக்தர்களும் அங்கே கூடிவிட்டார்கள். திருடனை என்ன செய்யலாம் என யோசித்தபோது முருகனே அவனைத் தண்டித்து விட்டார். நாம் ஒன்றும் செய்யவேண்டாம் என்று எல்லோரும் ஏகமனதாகத் தீர்மானித்து அவனை விட்டுவிட்டார்கள் அதன் பிறகு இங்குள்ள முருகனின் மகிமை இன்னும் அதிகமாகப் பரவியது என பக்தர்கள் பரவசத்துடன் கூறுகிறார்கள்.


தலஅமைப்பு: 

இக்கோவில் கருவறையில் அழகன் முருகன் சிவசுப்ரமணிய சுவாமி என்ற திருநாமத்துடன் கண்க்கொள்ளா அழகுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். காசி விஸ்வநாதர், செவ்வாய் பைரவர், முதலான தெய்வங்கள் தனித்தனி சந்நிதிகளில் அருள்புரிவது மிகவும் சிறப்பு.


திருவிழா:

பங்குனி உத்திரம், தமிழ் வருடப்பிறப்பு, திருக்கார்த்திகை, ஆடிக்கிருத்திகை, தைக்கிருத்திகை, பிரதி செவ்வாய், கிருத்திகை, சஷ்டி 


பிரார்த்தனை:

சகோதர ஒற்றுமை ஓங்கிட, வீடு, நிலப்பிரச்னை நீங்க, திருமணத்தடை அகல


நேர்த்திக்கடன்:

உப்பு, மிளகு காணிக்கை, அன்னதானம், செவ்வாய்க்கிழமையில் அங்காரகனுக்கு சிவப்பு வஸ்திரம், விசேஷ பூஜை  


திறக்கும் நேரம்:

காலை 8 - 12 மாலை 4-8


மேற்கு சைதாப்பேட்டை சிவசுப்ரமணி சிவசுப்ரமணிய சுவாமியை மனமுருக தொழுதால் வீடு மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்த்தருளுவார்! 


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - சகோதரர்கள் பகைகளை நீக்கியருளும் சென்னை மேற்கு சைதாப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி கோவில்



படம் 2 - திருமணத்தடையை அகற்றியருளும் சென்னை மேற்கு சைதாப்பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி பெருமான்



Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1326 - சேலம் K R தோப்பூர் பாலமுருகன் கோவில்