கோவில் 538 - கோயம்புத்தூர் கணபதி மாநகர் பாலமுருகன் கோவில்

 🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-538

வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றி தரும் கோயம்புத்தூர் கணபதி மாநகர் பாலமுருகன் கோவில்

28.11.2022 ஞாயிறு

அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

4th Block

கணபதி மாநகர் 

கோயம்புத்தூர்-641006 

கோயம்புத்தூர் மாவட்டம்

இருப்பிடம்: காந்திபுரம் பேருந்து நிலையம் 6 கிமீ

மூலவர்: பாலமுருகன்


தலமகிமை:

கோயம்புத்தூர் மாநகரம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சத்தி சாலையில் 6 கிமீ தொலைவில் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றி தரும் பிரசித்தி பெற்ற கணபதி மாநகர் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் சக்தி வாய்ந்த முருகப்பெருமானுடன் அண்ணாமலையாரும், நாராயணரும் சேர்ந்து அருளுவது சிறப்பம்சமாகும். 


பக்தர்கள் தங்களுக்கு தேவையானதை வேண்டி 48 நாட்கள் விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால், இத்தல முருகப்பெருமான் வேண்டியதை நிறைவேற்றித் தருவதாக ஐதீகம். 23 ஆண்டுகளாக தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. பாலமுருக பெருமானுக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம், சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. இத்திருவிழாவிற்கு அனைத்து பகுதியிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்கின்றேன். முருகப்பெருமானின் இதர விழாக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் முருகப்பெருமான், பாலமுருகன் என்ற திருப்பெயரில் அழகு ததும்ப பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கின்றார். மேலும் கன்னிமூல கணபதி, செல்வ கணபதி, உண்ணாமுலையம்மன் உடனுறை அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத நாராயணர், ஐயப்பன், துர்க்கை, ஆஞ்சநேயர், கால பைரவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருந்து அருள்கின்றனர். 


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, செவ்வாய், வெள்ளி


பிரார்த்தனை:

வேண்டுதல்கள் நிறைவேற, மன அமைதி அருள, அல்லல்கள் அகல  


நேர்த்திக்கடன்: 

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6.30-9.30 மாலை 6-8.30


அல்லல்கள் அகற்றும் கோயம்புத்தூர் கணபதி மாநகர் பாலமுருகனை பணிந்து வணங்குவோம்! 


வேலும் மயிலும் துணை! 

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - 538 வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றி தரும் கோயம்புத்தூர் கணபதி மாநகர் பாலமுருகன்



படம் 2 - 538 அல்லல்கள் அகற்றும் கோயம்புத்தூர் கணபதி மாநகர் பாலமுருகன் சஷ்டி திருவிழா திருக்கல்யாண கோலம்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்