கோவில் 535 - விழுப்புரம் சாலாமேடு பாலமுருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-535
வேண்டியன அருளும் விழுப்புரம் சாலாமேடு பாலமுருகன் கோவில்
25.11.2022 வெள்ளி
அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்
சாலாமேடு
விழுப்புரம்-605602
விழுப்புரம் மாவட்டம்
இருப்பிடம்: விழுப்புரம் 2 கிமீ
மூலவர்: பாலமுருகன்
தலமகிமை:
விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள சாலாமேடு பகுதியி உள்ள NGGO காலனியில் வேண்டியன அருளும் சாலாமேடு பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த அழகிய சிறிய கோவிலில் திகட்டாத அழகுடன் முருகப்பெருமான் அருள்கின்றார்.
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை என முருகனுக்குரிய அனைத்து விசேஷங்களும் கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
தல அமைப்பு:
கோவில் கொடிமரம் மற்றும் அருகில் மயில் அழகுடன் காணப்படுகின்றன. கருவறையில் முருகப்பெருமான் பாலமுருகன் என்ற திருப்பெயருடன் இளமை அழகுடன் வேல் தாங்கி புன்னகைத் ததும்ப பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்து அருள்பாலிக்கின்றார். அபிஷேக, அலங்காரம் காண்கின்ற முருக பக்தர்கள் முருகனை விட்டு அகலமுடியாத படி பொலிவுடன் தோற்றமளிப்பது சிறப்பம்சம். மேலும் விநாயகப்பெருமான், கிருஷ்ணர், ஐயப்பன், பார்வதி தேவி சமேத சிவபெருமான், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், உற்சவர்கள், பைரவர், நவக்கிரகங்கள் என அனைத்து தெய்வங்களும் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வேண்டியன அருளும், நற்குணங்கள் கிடைத்திட, ஐஸ்வர்யம் பெருக
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நற்குணங்கள் அருளிடும் விழுப்புரம் சாலாமேடு பாலமுருகனை வேண்டித் தொழுடிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 535 வேண்டியன அருளும் விழுப்புரம் சாலாமேடு பாலமுருகன்
படம் 2 - 535 நற்குணங்கள் அருளிடும் விழுப்புரம் சாலாமேடு பாலமுருகன்
Comments
Post a Comment