கோவில் 540 - திருவனந்தபுரம் இடபழஞ்சி (இடபழனி) பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-540
சிறுவர்கள் தோஷம் நீக்கும் திருவனந்தபுரம் இடபழஞ்சி (இடபழனி) பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
30.11.2022 செவ்வாய்
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
இடபழஞ்சி (இடபழனி)-695010
திருவனந்தபுரம்-695010
கேரளா மாநிலம்
இருப்பிடம்: திருவனந்தபுரம் பேருந்து நிலையம்/ரயில் நிலையம் 5 கிமீ
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
தலமகிமை:
திருவனந்தபுரம் பேருந்து நிலையம்/ரயில் நிலையத்திலிருந்து சொச்சார் சாலயில் 5 கிமீ தொலைவில் சிறுவர்கள் தோஷம் நீக்கும் திருவனந்தபுரம் இடபழஞ்சி கிள்ளியாற்றின் கரையில் சிறப்பு மிக்க பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இடபழனி என்று சிறப்பு பெயரில் அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி அருள்பாலிக்கின்றார். கேரள முறைப்படி ஆண்கள் சட்டை அணியாமல்தான் முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். வாழை இலையில் வீபூதியுடன் முருகனுக்கு பிடித்தமான சந்தன பிராசத்தை பக்தர்கள் பக்தியோடு வாங்கி நெற்றியில் அணிந்து கொள்கிறார்கள். இதன் முருகப்பெருமான் மூலம் அனைத்து நலன்களும் அருளுகின்றார் என்பது ஐதீகம். குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் போக்குகின்றார் கந்தன்.
தைப்பூசம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் கடும் விரதமிருந்து கந்தனுக்கு பால்குடம், காவடி எடுக்கிறார்கள். சஷ்டி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. சனிக்கிழமைகளில் ஐயப்பனுக்கு நீராஞ்சன வழிபாடுகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். நாகருக்கு ஆயியம் நட்சத்திர நாளில் மஞ்சள், பாலாபிஷேகம் செய்தால் நாக தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
சுற்று விளக்கு வழிபாடு: சுற்று விளக்கு வழிபாடு இந்தக் கோவிலில் சிறப்பு மிக்கது. என்ணிய காரியங்கள் நிறைவேறவும், நிறைவேறிய காரியங்களுக்கு நேர்த்த்க்கடனை செலுத்துவதற்காகவும் கோவிலைச் சுற்றியுள்ள கல் விளக்குகளில் தீபமேற்றி வழிபடுகின்றனர். மாலை நேரத்தில் கோவில் பிரகாரத்தில் சுடர் விடும் விளக்குகளிம் ஒலி கண் கொள்ளா காட்சி.
தல வரலாறு:
திருவனந்தபுரம் மாநகரின் மையப்பகுதியில் அமைதியான சூழலில் இக்கோவில் அமைந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர். பக்தர்களுக்கு பஜனை மடம், இளைப்பாற வசதிகள் உள்ளன.
தல அமைப்பு:
திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி சந்நிதி தேர் போல அமைக்கப்பட்டுள்ளது அழகு. அலங்கார ரூபத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். அடுத்து ஹரிஹரசுதன் ஐயப்பன் தனி சந்நிதியில் அருள்பாலிப்பது சிறப்பு. முருகப்பெருமானின் வலப்புறம் விநாயகப்பெருமான் அருள்கின்றார். இங்கு தினசரி கணபதி ஹோமம் நடைபெறுவது சிறப்பு. அடுத்து நாக தேவதைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மஞ்சள், பாலாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை நாக காவு என்றழைக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, வைகாசி விசாகம், சஷ்டி,
பிரார்த்தனை:
நாக தோஷம் நீங்க, பாலர் தோஷம் அகல, அனைத்து நலன்கள் அருள, எண்ணிய காரியங்கள் நிறைவேற,
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 5.30-10.30 மாலை 5.30-8.30
எண்ணிய காரியங்கள் நிறைவேற்றும் திருவனந்தபுரம் இடபழஞ்சி (இடபழனி) பாலசுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம்1 - 540 சிறுவர்கள் தோஷம் நீக்கும் திருவனந்தபுரம் இடபழஞ்சி (இடபழனி) பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
படம் 2 - 540 எண்ணிய காரியங்களை நிறைவேற்றும் திருவனந்தபுரம் இடபழஞ்சி (இடபழனி) பாலசுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment