கோவில் 169 - கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் பாலமுருகன் கோவில்

  🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-169

நினைத்த காரியங்கள் நிறைவேற்றியருளும் கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் பாலமுருகன் கோவில்

24.11.21 புதன்


அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில்

அகரம்-635119

கிருஷ்ணகிரி மாவட்டம்

இருப்பிடம்: ஓசுர் 16 கிமீ


மூலவர்: பாலமுருகன்

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானையுடன்

தலமகிமை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் மாநகரிலிருந்து 16 கிமீ தொலைவில் நினைத்த காரியங்களை நிறைவேற்றியருளும் கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் பாலமுருகன் கோவில். முருகப்பெருமான், இத்தலத்தில் பாலமுருகனாக அருள்பாலிக்கின்றார்.

இப்பகுதி வழியாக லாரியில் சரக்குகள் ஏற்றிச் செல்லும்போது தவறாமல் அகரம் பாலமுருகனை டிரைவர் வழிபட்டுச் செல்வாராம். ஒருநாள் வெளியூரில் தேங்காய் லோடு ஏற்றும்போது, லாரி டிரைவர் தேங்காய் வியாபாரிடம் பாலமுருகனுக்கு உடைக்க ஒரு தேங்காய் கேட்க. பாலமுருகனுக்கு கொம்பா முளைச்சிருக்கு? என்று கிண்டல் செய்து, தேங்காய் தர மறுத்தாராம். சில நிமிடங்களில் வியாபாரி லாரியில் ஏற்றிக்கொண்டிருந்த தேங்காய் ஒன்றில் இரண்டு கொம்புகள் காணப்பட்டதாம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த அந்த வியாபாரி, பாலமுருகனிடம் மானசீகமான மன்னிப்புக் கோரியதோடு கொம்பு முளைத்த அந்த தேங்காயை கோயிலில் பாதுகாத்து வரச்சொல்லி, டிரைவரிடம் கொடுத்தனுப்பி விட்டாராம். அந்த கொம்பு முளைத்த தேங்காயை இவ்வாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.


குழந்தை பாக்யம் இல்லாத பெண்கள் கோவிலுக்கு முன் உள்ள வில்வமரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், பாலமுருகன் அவர்கள்து கோரிக்கைளை நிறைவேற்றுகிறார் என்பது ஐதீகம்.


தலவரலாறு:

பல வருடங்களுக்கு முன்பு ஒருநாள் ராயக்கோட்டையிலிருந்து ஓசூருக்கு கதாகாலட்சேபம் செய்ய முருக பக்தர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். வழியில் அகரம் கிராமத்தில் சர்ப்பம் ஒன்று அவரை வழிமறித்தது, முருகா! ஏன் என்னைத் தடுக்கிறாய்? என்று கைகூப்பியபடி கேட்க, நாகம் நகரத் தொடங்கியது அது தம்மை எங்கோ அழைத்துச் செல்ல முற்படுகிறது என்பதை உணர்ந்து. நாகத்தைப் பின்தொடர்ந்தார் புதர் மண்டிக்கிடந்த இடத்தில் புற்று ஒன்றின் அருகில் சென்றதும் பாம்பு திடீரென மறைந்து போனது. உடனே அந்த இடத்தை ஆராய்ந்து பார்க்க அங்கே ஒரு மண்டபமும் திருக்குளமும் கோயில் ஒன்று இருந்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டன. பின்னர் விசாரிக்க, இப்பகுதியில் அன்னியர் படையெடுப்பின்போது பல ஆலயங்கள் அழிக்கப்பட்டதாகவும் அதில் இந்த ஆலயமும் ஒன்று என்பதும் தெரியவந்தது. ஆறுமுகனுக்கு ஆலயம் ஒன்று கட்ட வேண்டுமென நீண்ட நாட்களாக எண்ணிக் கொண்டிருந்த அந்த பக்தர் அவ்விடத்தைச் சீர்படுத்தி அங்கே சிறிய பாலமுருகன் சிலையை பிரதிஷ்டை செய்தார் தினசரி பூஜைகளையும் மேற்கொண்டார். பல வருடங்கள் வழிபாட்டிலிருந்த பழைய ஆலயத்திற்கப் பக்கத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டு, பழைய ஆலயத்திலிருந்த மூலவரையும் இங்கே பிரதிஷ்டை செய்ததோடு புதிய சந்நிதிகளையும் அமைத்திருக்கிறார்கள்.


தல அமைப்பு:

ஆலயத்தின் உல்ளே நுழைந்து தீபஸ்தம்பம், மயூர மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவற்றை கடந்தால் கருவறையில் மூலவராக கருணையே உருவான பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கின்றார் மயில் வாகனத்திற்கு முன்பு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருள் புரியும் அவர் அழகு மெய் சிலிர்க்க வைக்கும். உற்சவர் சந்நிதியில் வள்ளி தெய்வானை உடனுறை முருகப்பெருமான் பேரழகுடன் அம்சமாக அருளுகின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர், சிவப்பெருமான், நவக்கிரகங்கள் முதலான தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்..


திருவிழா:

தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தமிழ் வருட பிறப்பு, ஆடிக்கிருத்திகை, கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்க, \ புத்திர பாக்கியம் கிட்ட, பயம், நோய்கள், மனக்குறைகள் அகல, தொழில் விருத்திyadaiya, செல்வம் பெருக, பவுர்ணமி கிரிவலம்


நேர்த்திக்கடன்:

அபிஷேகங்கள், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வில்வ மரத்தில் தொட்டில் கட்டுதல், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்

திறக்கும் நேரம்:

காலை 8-12 மாலை 5-7.30


தொட்டில் கட்டி மனமுருக வழிபட்டால் குழந்தைப்பேறு அருளும் கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் பாலமுருகனை அனைவரும் பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

  🙏🙏


படம் 1 - நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றி தந்தருளும் அகரம் பாலமுருகன் கோவில் கிருஷ்ணகிரி மாவட்டம்


படம் 2 - கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் பாலமுருகன் திருத்தலத்தில் வில்வ மரத்தில்தொட்டில் கட்டி நேர்த்திக்கடனை செலுத்தல்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்