கோவில் 22 - கிருஷ்ணகிரி மாவட்டம் கந்தர்மலை முருகன் திருக்கோவில்
தினம் ஒரு முருகன் ஆலயம்-22 நினைத்ததை நிறைவேற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்தர்மலை முருகன் திருக்கோவில் 30.6.2021 புதன் அருள்மிகு கந்தர்மலை முருகன் திருக்கோவில் சுண்டக்காய்பட்டி-635123 காவேரிப்பட்டணம் கிருஷ்ணகிரி மாவட்டம் இருப்பிடம்: கிருஷ்ணகிரி 24 கிமீ, காவேரிப்பட்டணம் 12 கிமீ மூலவர்: முருகன் தலமகிமை: அதிசயங்களும், அற்புதங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் முருகன் ஆலயங்களில் ஒன்றுதான் ‘கந்தர்மலை முருகன் கோவில். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் இருந்து 12 கிமீ தொலைவில் சுண்டக்காய்பட்டியின் மலை மேல் கந்தர்மலை முருகன் கோவில் அமைந்துள்ளது, இம்மலையில் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது. சித்தர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாக மேலே உள்ள குகையில் ருத்திராட்ச மணிகள் கிடைத்திருக்கின்றன. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் போன்ற மகான்கள் கந்தர்மலை முருகனை தரிசனம் செய்துள்ளார்கள் என்பது சிறப்பு. இங்குள்ள வள்ளி குளத்தின் மேல் சூரிய ஒளி, சந்திர ஒளி படுவதில்லை . இந்தக் குளத்து நீரை பருகினால் தீராத நோய்கள் தீர்ந்துவிடும் என்பத