கோவில் 1779 - கேரளா திருச்சூர் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1779 வாழ்வில் ஏற்றங்கள் தரும் கேரளா திருச்சூர் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவில் 22.04.2026 புதன் அருள்மிகு தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இரிங்கப்ராம் 680103 [Iringaprom] திருச்சூர் மாவட்டம் [Thrissur] கேரளா மாநிலம் [Kerala] இருப்பிடம்: திருச்சூர் 29 கிமீ, குருவாயூர் 2 கிமீ, ஷோரனூர் 42 கிமீ, கொச்சி விமான நிலையம் 80 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி தல மகிமை: கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிங்கப்ராம் நகரில் வாழ்வில் ஏற்றங்கள் தரும் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் அருகில் மிகவும் பிரசித்திப் பெற்ற குருவாயூர் குருவாயூரப்பன் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். திருச்சூர் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது...