கோவில் 1776 - கேரளா திருச்சூர் நடத்தாரா எரவிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு சுப்பிரமணிய சுவாமி ஆலயம்-1776
நல்லன அருளும் கேரளா திருச்சூர் நடத்தாரா எரவிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
19.04.2026 ஞாயிறு
அருள்மிகு எரவிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
எரவிமங்கலம் [Eravimangalam]
நடத்தாரா 680014 [Nadathara]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 10 கிமீ, நடத்தாரா 2 கிமீ, குருவாயூர் 38 கிமீ, ஷோரனூர் 42 கிமீ, கொச்சி விமான நிலையம் 47 கிமீ, பாலக்காடு 65 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாநகரம் நடத்தாரா பகுதியில் எரவிமங்கலம் எனும் இடத்தில் நல்லன அருளும் நடத்தாரா எரவிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
திருச்சூர் நடத்தாரா எரவிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது நடத்தாரா பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 47 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 65 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் நடத்தாரா எரவிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் நின்ற திருக்கோல்லத்தில் திருக்காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.
திருச்சூர் நடத்தாரா எரவிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி திருவிழா ஆறு நாட்கள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் நடத்தாரா எரவிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு பழமையான முருகன் திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் நடத்தாரா எரவிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டிட அமைப்பு கேரள கட்டிட பாணியில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் வாயிலில் உயர்ந்த கொடிமரம் உள்ளது. இத்திருக்கோவிலில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், சிவபெருமான், பகவதி, ஐயப்பன் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
நல்லன அருள, வாழ்வில் ஏற்றம் பெற, நினைத்தது நடைபெற, சந்தான பிராப்தி கிட்ட, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் தீர, வினைகள் போக்க, பிணிகள் அகல, ஞானம் மேம்பட, செல்வம் சேர, கவலைகள் மறைய, மன அமைதி வேண்டி, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 5.30-9.30 மாலை 5.30-7
வாழ்வில் ஏற்றம் தரும் திருச்சூர் நடத்தாரா எரவிமங்கலம் சுப்பிரமணிய சுவாமியை மனமுருக கும்பிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1776 நல்லன அருளும் கேரளா திருச்சூர் நடத்தாரா எரவிமங்கலம் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment