கோவில் 1777 - கேரளா திருச்சூர் லாலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு சுப்பிரமணிய சுவாமி ஆலயம்-1777
செல்வம் பெருக அருளும் கேரளா திருச்சூர் லாலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
20.04.2026 திங்கள்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
உரகம் [Urakam]
லாலூர் [Laloor]
திருச்சூர் 680007
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 4 கிமீ, திருச்சூர் வடக்குநாதன் கோவில் 4 கிமீ, குருவாயூர் 27 கிமீ, ஷோரனூர் 36 கிமீ, கொச்சி விமான நிலையம் 53 கிமீ, பாலக்காடு 68 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாநகரம் லாலூர் பகுதியில் உரகம் எனும் இடத்தில் செல்வம் பெருக லாலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலிலிருந்து 4 கிமீ அருகில் உலகப் புகழ் பெற்ற திருச்சூர் வடக்குநாதன் கோவில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
திருச்சூர் லாலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 53 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 68 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் லாலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார்.
திருச்சூர் லாலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஷு ஆண்டு தோறும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் இத்திருக்கோவிலில் தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட சுப்பிரமணிய சுவாமியின் எல்லா திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் மாநகரில் அமைந்துள்ள லாலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இப்பகுதியில் சிறப்பு மிக்க திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் லாலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டிட அமைப்பு அழகாக அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், பகவதி அம்மன், ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். திருக்கோவில் சுவர்களில் முருகப்பெருமான் கண்கவர் சித்திரங்கள் அழகாக வரையப்பட்டுள்ளன.
திருவிழா:
விஷு, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
செல்வம் பெருக, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, வேண்டியது கிடைக்க, குழந்தைப்பேறு வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, வினைகள் தீர, பிணிகள் நீங்க, சகல நோய்களும் குணமாக, கஷ்டங்கள் விலக, நல்லன அருள, மன நிம்மதி கிட்ட, தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் திருச்சூர் லாலூர் சுப்பிரமணிய சுவாமி திருவடிகள் பணிந்திடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1777 செல்வம் பெருக அருளும் கேரளா திருச்சூர் லாலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment