கோவில் 1775 - இங்கிலாந்து மில்டன் கீன்ஸ் முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1775
நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் இங்கிலாந்து மில்டன் கீன்ஸ் முருகன் கோவில்
18.04.2026 சனி
அருள்மிகு மில்டன் கீன்ஸ் முருகன் திருக்கோவில்
கிளேசியர் வீதி [Glazier Drive]
நீத் ஹில் [Neath Hill]
மில்டன் கீன்ஸ் [Milton Keynes]
MK14 6HG
பக்கிங்ஹாம்ஷயர் [Buckinghamshire County]
இங்கிலாந்து [England]
யுனைட்டெட் கிங்டம் [United Kingdom]
இருப்பிடம்: லண்டன் விமான நிலையம்/லண்டன் மெட்ரொ ரயில் நிலையம் 55 மைல், மில்டன் கீன்ஸ் [Milton Keynes] 2 மைல், பெர்ஃபோர்ட் [Bedford] 16 மைல், நார்த்தாம்டன் [Northampton] 20 மைல், ஆக்ஸ்ஃபோர்ட் [Oxford] 44 மைல், கேம்பிரிட்ஜ் [Cambridge] 48 மைல்
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
கும்பாபிஷேகம்: 29.04.2026
தல மகிமை:
இங்கிலாந்து நாட்டில் பக்கிங்ஹாம்ஷயர் மாவட்டம் மில்டன் கீன்ஸ் நகரில் உள்ள நீத் ஹில் பகுதியில் கிளேசியர் வீதியில் நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் மில்டன் கீன்ஸ் முருகன் கோவில் அமைந்துள்ளது. சிறப்பு மிக்க இந்த முருகன் திருக்கோவில் கும்பாபிஷேகம் 29.04.2026 நடைபெற உள்ளது.
மில்டன் கீன்ஸ் முருகன் கோவில் இங்கிலாந்து தலைநகரம் லண்டன் விமான நிலையம்/லண்டன் மெட்ரொ ரயில் நிலையத்திலிருந்து 55 மைல் தொலைவு அல்லது மில்டன் கீன்ஸ் ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவு அல்லது பெர்ஃபோர்ட் ரயில் நிலையத்திலிருந்து 16 மைல் தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது நார்த்தாம்டன் ரயில் நிலையத்திலிருந்து 20 மைல் தொலைவு அல்லது ஆக்ஸ்ஃபோர்ட் ரயில் நிலையத்திலிருந்து 44 மைல் தொலைவு அல்லது கேம்பிரிட்ஜ் ரயில் நிலையத்திலிருந்து 48 மைல் தொலைவு பிரயாணம் செய்தாலும் மில்டன் கீன்ஸ் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து அருளாட்சி செய்கின்றார்.
மில்டன் கீன்ஸ் முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் வெகுச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நன்னாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் சிவராத்திரி, நவராத்திரி, ராமநவமி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு புத்தாண்டு தினங்கள் மற்றும் முக்கியமான இந்து பண்டிகைகள் அனைத்தும் விமரிசையாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
இங்கிலாந்து மில்டன் கீன்ஸ் முருகன் கோவில் இப்பகுதியில் குடியேறிய தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பேருதவியுடன் கட்டப்பட்டு 19 ஆண்டுகளாக கோவில் அறங்காவலர் குழுவினரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இத்திருக்கோவிலில் திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 29.04.2026 மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற உள்ளது.
தல அமைப்பு:
மில்டன் கீன்ஸ் முருகன் கோவில் கட்டிட அழகிய அமைப்புடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், சிவபெருமான், அம்மன், ராமர் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை, சிவராத்திரி, நவராத்திரி, ராமநவமி, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு புத்தாண்டு தினங்கள் மற்றும் முக்கியமான இந்து பண்டிகைகள்
பிரார்த்தனை:
நேர்மறை எண்ணங்கள் உண்டாக, இகபர சுகம் வேண்டி, வினைகள் தீர, பிணிகள் அகல, திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் கிட்ட, குடும்ப ஒற்றுமை ஓங்க, நோய்கள் குணமடைய, நல்லன அருள, மன மகிழ்ச்சி கிட்ட, ஐஸ்வர்யம் பெருக, கல்வி, ஞானம் சிறக்க, வியாபாரம், தொழில் மேம்பட, கவலைகள் போக்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
தற்போது செவ்வாய், வியாழன், விசேஷ தினங்கள் மட்டும் மாலை 7.30-9.30
இகபர சுகம் தந்தருளும் இங்கிலாந்து மில்டன் கீன்ஸ் முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1775 நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் இங்கிலாந்து மில்டன் கீன்ஸ் முருகன்
Comments
Post a Comment