கோவில் 1778 - கேரளா திருச்சூர் மணக்கொடி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1778
மன மகிழ்ச்சி தரும் கேரளா திருச்சூர் மணக்கொடி சுப்பிரமணிய சுவாமி கோவில்
21.04.2026 செவ்வாய்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
[அ/மி பாலமுருகன் திருக்கோவில்]
மணக்கொடி 680012 [Manakody]
[Manakody]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 8 கிமீ, குருவாயூர் 25 கிமீ, ஷோரனூர் 40 கிமீ, பாலக்காடு 45 கிமீ, கொச்சி விமான நிலையம் 55 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாநகரம் மணக்கொடி பகுதியில் மன மகிழ்ச்சி தரும் மணக்கொடி சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் சிறப்பு மிக்க ஒரு புராதான கோவிலாகும்.
திருச்சூர் மணக்கொடி சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 40 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 55 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் மணக்கொடி சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து அருள்கின்றார்.
திருச்சூர் மணக்கொடி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொர் வருடமும் தைப்பூசத் திருவிழா முக்கியத் திருவிழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காவடி திருவிழா, யானைகளின் மேல் சுப்பிரமணிய சுவாமி அமர்ந்து திரு விதியுலா சிறப்பு நிகழ்வுகளாகும். மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட சுப்பிரமணிய சுவாமியின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்புவழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் மாநகரில் உள்ள மணக்கொடி சுப்பிரமணிய சுவாமி கோவில்ளில் மிககவும் புராதான திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் மணக்கொடி சுப்பிரமணிய சுவாமி கோவில் அழகுற அமைந்துள்ளது. திருக்கோவில் உள்ளே நுழைந்த உடன் ஒரு அழகிய வேல் மற்றும் தீபஸ்தம்பம் ஒன்றும் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, உற்சவர் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
மன மகிழ்ச்சி கிடைக்க, இடர்கள் களைய, எண்ணியது ஈடேற, நல்லன நடைபெற, குழந்தைச் செல்வம் கிட்ட, நோய்கள் தீர, வினைகள் அகல, பிணிகள் போக்க, மன அமைதி பெற, நல்ல எண்ணங்கள் உண்டாக, ஆனந்தம் பொங்க, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
இடர்கள் களைய அருளும் திருச்சூர் மணக்கொடி சுப்பிரமணிய சுவாமி திருத்தாள் பணிந்து பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1778 மன மகிழ்ச்சி தரும் கேரளா திருச்சூர் மணக்கொடி சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment