கோவில் 1779 - கேரளா திருச்சூர் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1779
வாழ்வில் ஏற்றங்கள் தரும் கேரளா திருச்சூர் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவில்
22.04.2026 புதன்
அருள்மிகு தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
இரிங்கப்ராம் 680103 [Iringaprom]
திருச்சூர் மாவட்டம் [Thrissur]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: திருச்சூர் 29 கிமீ, குருவாயூர் 2 கிமீ, ஷோரனூர் 42 கிமீ, கொச்சி விமான நிலையம் 80 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் இரிங்கப்ராம் நகரில் வாழ்வில் ஏற்றங்கள் தரும் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் அருகில் மிகவும் பிரசித்திப் பெற்ற குருவாயூர் குருவாயூரப்பன் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.
திருச்சூர் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 80 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார்.
திருச்சூர் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருவிழா முக்கியத் திருவிழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காவடி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் இத்திருக்கோவிலில் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமியின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
திருச்சூர் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கட்டிட அமைப்பு பொலிவுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், சிவபெருமான், ஐயப்பன் உள்ளிட்ட அனைத்துத் தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை
பிரார்த்தனை:
வாழ்வில் ஏற்றங்கள் பெற, வேண்டியதை தந்திட, வினைகள் அகல, பிணிகள் தீர, குழந்தைப் பேறு வேண்டி, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன அருள, மன நிம்மதி கிடைக்க, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, துன்பங்கள் விலக தோஷங்கள் அகல
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வேண்டியதை தந்தருளும் திருச்சூர் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
🙏🏻🙏🏻
படம் 1 - 1779 வாழ்வில் ஏற்றங்கள் தரும் கேரளா திருச்சூர் இரிங்கப்ராம் தனபரம்பில் சுப்பிரமணிய சுவாமி கோவில்
Comments
Post a Comment