கோவில் 1773 - கேரளா திருச்சூர் வெங்கநெல்லூர் முருகன் கோவில்

🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1773

நல்லன அருளும் கேரளா திருச்சூர் வெங்கநெல்லூர் முருகன் கோவில்

16.04.2026 வியாழன்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

வெங்கநெல்லூர் 680587 [Venganellur]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala]


இருப்பிடம்: திருச்சூர் 36 கிமீ, ஷோரனூர் 17 கிமீ, குருவாயூர் 47 கிமீ, பாலக்காடு 47 கிமீ


மூலவர்: முருகன்

உற்சவர்: முருகன்


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெங்கநெல்லூர் கிராமத்தில் நல்லன அருளும் வெங்கநெல்லூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் அருகில் சிறப்பு மிக்க வெங்கநெல்லூர் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது..


திருச்சூர் வெங்கநெல்லூர் முருகன் கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவு அல்லது ஷோரனூர் பேருந்து நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 47 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 47 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் வெங்கநெல்லூர் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் ஆற்றலுடன் வீற்றிருந்து அருள்கின்றார்.


திருச்சூர் வெங்கநெல்லூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் விமரிசையாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் எல்லா திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற நன்னாட்களில் சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன.


தல வரலாறு:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெங்கநெல்லூர் முருகன் கோவில் இப்பகுதியில் ஒரு பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாகும்.


தல அமைப்பு:

திருச்சூர் வெங்கநெல்லூர் முருகன் கோவில் வாயிலில் அழகிய தீபஸ்தம்பம் உள்ளது. இத்திருக்கோவிலில் கருவறையில் மூலவர் முருகன் ஆற்றலுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

நல்லன அருள, வினை விலக, எண்ணியது நடக்க, பிணிகள் போக்க, ஐஸ்வர்யங்கள் பெருக, சந்தான பிராப்தி கிட்ட, நோய்கள் நீங்க, மன மகிழ்ச்சி வேண்டி, பாவங்கள் தீர, தோஷங்கள் அகல

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 5-8 மாலை 5.30-7


வினைகளை விலக்கி அருளும் திருச்சூர் வெங்கநெல்லூர் முருகன் திருவடிகள் பணிந்து வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

🙏🏻🙏🏻


படம் 1 - 1773 நல்லன அருளும் கேரளா திருச்சூர் வெங்கநெல்லூர் முருகன் கோவில்



படம் 2 - 1773 வினைகளை விலக்கி அருளும் திருச்சூர் வெங்கநெல்லூர் முருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்