கோவில் 1774 - கேரளா திருச்சூர் மெத்தலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                    

தினம் ஒரு சுப்பிரமணிய சுவாமி ஆலயம்-1774

மன அமைதி தரும் கேரளா திருச்சூர் மெத்தலை சுப்பிரமணிய சுவாமி கோவில்  

17.04.2026 வெள்ளி


அருள்மிகு சுப்பிரமணிய  சுவாமி திருக்கோவில்

மெத்தலை 680669 [Methala]

திருச்சூர் மாவட்டம் [Thrissur]

கேரளா மாநிலம் [Kerala] 


இருப்பிடம்: திருச்சூர் 42 கிமீ, கொடுங்கல்லூர் 3 கிமீ, ஆலுவா 30 கிமீ, கொச்சி விமான நிலையம் 32 கிமீ, கொச்சி 47 கிமீ, குருவாயூர் 47 கிமீ, பாலக்காடு 53 கிமீ   


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி 


தல மகிமை:

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் மெத்தலை நகரில் மன அமைதி தரும் மெத்தலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்தத் திருக்கோவிலுக்கு அருகில் சிறப்பு மிக்க கொடுங்கல்லூர் பகவதி அம்மன் திருக்கோவில்  அமைந்துள்ளது. 


திருச்சூர் மெத்தலை சுப்பிரமணிய சுவாமி கோவில் திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து 42 கிமீ தொலைவு அல்லது கொடுங்கல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது ஆலுவா பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ தொலைவு அல்லது கொச்சி விமான நிலையத்திலிருந்து 32 கிமீ தொலைவு அல்லது கொச்சி பேருந்து நிலையத்திலிருந்து 47 கிமீ தொலைவு அல்லது குருவாயூர் பேருந்து நிலையத்திலிருந்து 47 கிமீ தொலைவு அல்லது பாலக்காடு பேருந்து நிலையத்திலிருந்து 53 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் திருச்சூர் மெத்தலை சுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றார். 


திருச்சூர் மெத்தலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருவிழா முக்கியத் திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா மற்ற திருக்கோவில்களில் நடைபெறுவது போலவே விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் இத்திருக்கோவிலில் பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை போன்ற திருநாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. 


தல வரலாறு:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மெத்தலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கொடுங்கல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிறப்பு மிக்க முருகப்பெருமான்  திருக்கோவிலாகும். 


தல அமைப்பு:

திருச்சூர் மெத்தலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டிட அமைப்பு கேரள கட்டிட பாணியில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் வாயிலில் உயர்ந்த தீபஸ்தம்பம் உள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி கையில் வேலுடன் பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் கணபதி, உற்சவர், சிவபெருமான், பகவதி, ஐயப்பன் உள்ளிட்ட எல்லா பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 


திருவிழா: 

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மன அமைதி பெற, எண்ணியவை ஈடேற, குழந்தைப்பேறு வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, நல்லன அருள, வினை போக்க, பிணிகள் தீர, செல்வம் பெருக, உடல் ஆரோக்கியம் உண்டாக, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, இடர்கள் களைய, தோஷங்கள் விலக

  

நேர்த்திக்கடன்:

காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 5.30-10 மாலை 5-7.30


எண்ணியவை ஈடேற அருளும் திருச்சூர் மெத்தலை சுப்பிரமணிய சுவாமியின் தாள் பணிந்து தொழுதிடுவோம்! 


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்! 


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com 

🙏🏻🙏🏻


படம் 1 - 1774 மன அமைதி தரும் கேரளா திருச்சூர் மெத்தலை சுப்பிரமணிய சுவாமி கோவில்



படம் 2 - 1774 எண்ணியவை ஈடேற அருளும் திருச்சூர் மெத்தலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்