கோவில் 1692 - மலேசியா சிலாங்கூர் பலாக்கோங் பாலசுப்பிரமணியர் கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1692 தடைகள் விலக்கும் மலேசியா சிலாங்கூர் பலாக்கோங் பாலசுப்பிரமணியர் கோவில் 25.01.2026 ஞாயிறு அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் தாமான் ஸ்ரீ தீமா [Taman Sri Timah] 43300 பலாக்கோங் [Balakong] உலு லங்காட் மாவட்டம் [Hulu Langat District] சிலாங்கூர் மாநிலம் [Selangor State] மலேசியா [Malaysia] இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 18 கிமீ, பலாக்கோங் [Balakong] 5 கிமீ, செரி கெம்பாங்கன் [Seri Kembangan] 5 கிமீ, செர்டாங் [Serdang] 5 கிமீ, சுங்கை லோங் [Sungai Long] 11 கிமீ, கஜாங் [Kajang] 15 கிமீ, செராஸ் [Cheras] 16 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 19 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 33 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணியர் உற்சவர்: பாலசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை கும்பாபிஷேகம்: 02.02.2024 தல மகிமை: மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] உலு லங்காட் மாவட்டம் [Hulu Langat District] பலாக்கோங...