கோவில் 1691 - மலேசியா சிலாங்கூர் அம்பாங் சுப்பிரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1691

திருப்பங்கள் தந்தருளும் மலேசியா சிலாங்கூர் அம்பாங் சுப்பிரமணியர் கோவில்

24.01.2026 சனி


அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்

Kampung Tasek Permai

68000 அம்பாங் [Ampang]

கோம்பாங் மாவட்டம் [Gombak District]

சிலாங்கூர் மாநிலம் [Selangor State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 14 கிமீ, அம்பாங் ஜெயா [Ampang Jaya] 3 கிமீ, பாண்டான் இண்டா [Pandan Indah] 4 கிமீ, கஜாங் [Kajang] 22 கிமீ, பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] 24 கிமீ, கோம்பாக் [Gombak] 28 கிமீ, சுபாங் ஜெயா [Subang Jaya] 29 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 36 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 46 கிமீ

மூலவர்: சுப்பிரமணியர்

உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] கோம்பாங் மாவட்டம் [Gombak District] அம்பாங் [Ampang] நகரில் திருப்பங்கள் தந்தருளும் அம்பாங் சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது அம்பாங் ஜெயா [Ampang Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவு அல்லது பாண்டான் இண்டா [Pandan Indah] பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது கஜாங் [Kajang] பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது கோம்பாக் [Gombak] பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது சுபாங் ஜெயா [Subang Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது புத்ராஜெயா [Putrajaya] பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 46 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் அம்பாங் சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் கையில் வேலேந்தி பொலிவுடன் அருளாட்சி செய்கின்றார்.


மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோம்பாங் மாவட்டம் அம்பாங் சுப்பிரமணியர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி திருவிழா 7 நாட்கள் சிறப்புப் பூஜைகளுடன் கோலாகலமாக நடைபெறுகின்றது. இத்திருவிழாவில் லாரியில் சுவாமி வீதி உலா வருவது சிறப்பு அம்சமாகும். தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழாவும் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மாசி மகம் உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் விசேஷ பூஜைகளுடன் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோம்பாங் மாவட்டம் அம்பாங் சுப்பிரமணியர் கோவில் 1980-ம் வருட வாக்கில் இப்பகுதி வாழ் தமிழ் பக்தர்களால் வேல் ஒன்றை பிரதிஷ்டை செய்யப்பட்டு, முருகப்பெருமானாக வழிபடப்பட்டு வந்தது. பின்னர் சுப்பிரமணியர், விநாயகர், மாரியம்மன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தற்போது சிறப்பு மிக்க முருகப்பெருமான் திருக்கோவிலாக திகழ்கின்றது.

தல அமைப்பு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் கோம்பாங் மாவட்டம் அம்பாங் சுப்பிரமணியர் கோவில் கோபுரங்கள், மட்டும் சிற்பங்களுடன் அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் கையில வேலேந்தி பொலிவுடன் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. விநாயகர், உற்சவர், மாரியம்மன் உட்பட எல்லா தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மாசி மகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

திருப்பங்கள் தந்தருள, ஏற்றங்கள் பெற, விருப்பங்கள் நிறைவேற, இரு வினைகள் நீங்க, பிணிகள் தீர, குழந்தை வரம் கிட்ட, உடல் ஆரோக்கியம் உண்டாக, நல்லன நடைபெற, இடர்கள் களைய, மன மகிழ்ச்சி பெற்றிட, தோஷங்கள் விலக, ஆனந்தம் பொங்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9 (முக்கிய தினங்கள் மட்டும்) மாலை 6-9


ஏற்றங்கள் பெற அருளும் மலேசியா சிலாங்கூர் அம்பாங் சுப்பிரமணியரை மனமுருகி வேண்டுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1691 திருப்பங்கள் தந்தருளும் மலேசியா சிலாங்கூர் அம்பாங் சுப்பிரமணியர்


படம் 2 - 1691  ஏற்றங்கள் பெற அருளும் மலேசியா சிலாங்கூர் அம்பாங் சுப்பிரமணியர்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்