கோவில் 1692 - மலேசியா சிலாங்கூர் பலாக்கோங் பாலசுப்பிரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1692

தடைகள் விலக்கும் மலேசியா சிலாங்கூர் பலாக்கோங் பாலசுப்பிரமணியர் கோவில்

25.01.2026 ஞாயிறு


அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில்

தாமான் ஸ்ரீ தீமா [Taman Sri Timah]

43300 பலாக்கோங் [Balakong]

உலு லங்காட் மாவட்டம் [Hulu Langat District]

சிலாங்கூர் மாநிலம் [Selangor State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 18 கிமீ, பலாக்கோங் [Balakong] 5 கிமீ, செரி கெம்பாங்கன் [Seri Kembangan] 5 கிமீ, செர்டாங் [Serdang] 5 கிமீ, சுங்கை லோங் [Sungai Long] 11 கிமீ, கஜாங் [Kajang] 15 கிமீ, செராஸ் [Cheras] 16 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 19 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 33 கிமீ

மூலவர்: பாலசுப்பிரமணியர்

உற்சவர்: பாலசுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை

கும்பாபிஷேகம்: 02.02.2024


தல மகிமை:

மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] உலு லங்காட் மாவட்டம் [Hulu Langat District] பலாக்கோங் [Balakong] நகரில் தாமான் ஸ்ரீ தீமா [Taman Sri Timah] பகுதியில் தடைகள் விலக்கும் மலேசியா சிலாங்கூர் பலாக்கோங் பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் 02.02.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது பலாக்கோங் [Balakong] பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது செரி கெம்பாங்கன் [Seri Kembangan] பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது செர்டாங் [Serdang] பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவு அல்லது சுங்கை லோங் [Sungai Long] பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ தொலைவு அல்லது கஜாங் [Kajang] பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது செராஸ் [Cheras] பேருந்து நிலையத்திலிருந்து 16 கிமீ தொலைவு அல்லது புத்ராஜெயா [Putrajaya] பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது உலு லங்காட் [Hulu Langat] 28 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] 33 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பலாக்கோங் பாலசுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியர் கையில் தண்டம் ஏந்தி அருள்பாலிக்கின்றார்.

மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு லங்காட் மாவட்டம் பலாக்கோங் பாலசுப்பிரமணியர் கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழா 13 நாட்கள் சிறப்புப் பூஜைகளுடன் கோலாகலமாக நடைபெறுகின்றது. கந்த சஷ்டி திருவிழா 7 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றது. தினசரி சிறப்புப் பூஜைகள் நடக்கின்றன. ஆறாம் நாள் சூரசம்ஹார வதமும், 7-ம் நாள் திருக்கல்யாணம் நிகழ்வது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். தைப்பூசத் திருவிழாவும் மிகவும் விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மாசி மகம் உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு லங்காட் மாவட்டம் பலாக்கோங் பாலசுப்பிரமணியர் கோவில் இப்பகுதியில் உள்ள பிரசித்திப் பெற்றக் கோவிலாகும். 2023-2024-ல் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 02.02.2024 அன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

தல அமைப்பு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு லங்காட் மாவட்டம் பலாக்கோங் பாலசுப்பிரமணியர் கோவிலில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் பாலசுப்பிரமணியர் கையில தண்டம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. விநாயகர், உற்சவர், மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், சித்ரா பௌர்ணமி, திருக்கார்த்திகை, மாசி மகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

தடைகள் விலக, செல்வ விருத்தியடைய, எண்ணியது ஈடேற, பழ வினைகள் தீர, பிணிகள் போக்க, சந்தான பாக்கியம் உண்டாக, வாழ்வில் திருப்பங்க்ள் ஏற்பட, நோய்கள் குணமாக, மன அமைதி கிடைக்க, நல்லன அருள, தோஷங்கள் அகல


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-9 மாலை 6-9


செல்வ விருத்தி தரும் மலேசியா சிலாங்கூர் பலாக்கோங் பாலசுப்பிரமணியர் திருவடிகள் பணிந்து தொழுதிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1692 தடைகள் விலக்கும் மலேசியா சிலாங்கூர் பலாக்கோங் பாலசுப்பிரமணியர்


படம் 2 - 1692 செல்வ விருத்தி தரும் மலேசியா சிலாங்கூர் பலாக்கோங் பாலசுப்பிரமணியர்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்