கோவில் 1688 - மலேசியா சிலாங்கூர் கம்போங் தீமா எஸ்.கே.சி. வேல்முருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1688
தடங்கல்கள் நீக்கும் மலேசியா சிலாங்கூர் கம்போங் தீமா எஸ்.கே.சி. வேல்முருகன் கோவில்
21.01.2026 புதன்
அருள்மிகு வேல்முருகன் திருக்கோவில்
48300 கம்போங் தீமா எஸ்.கே.சி. [KampungTimah SKC]
உலு சிலாங்கூர் மாவட்டம் [Hulu Selangor District]
சிலாங்கூர் மாநிலம் [Selangor State]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 51 கி மீ, புக்கிட் பெருந்தோங் [Bukit Beruntung] 6 கிமீ, புக்கிட் செந்தோசா [Bukit Sentosa] 8 கிமீ, ரவாங் [Rawang] 19 கிமீ, செரண்டா [Serendah] 20 கிமீ, ராசா [Bandar Rasa] 24 கிமீ, பத்தாங்காலி [Batang Kali] 30 கிமீ, உலு சிலாங்கூர் [Hulu Selangor] 33 கிமீ, கோலா குபு பாரு [Kuala Kubu Bharu] 33 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 57 கிமீ
மூலவர்: வேல்முருகன்
உற்சவர்: வேல்முருகன் வள்ளி, தெய்வானை
Kumbaabishaekam: 2015
தல மகிமை:
மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] உலு சிலாங்கூர் மாவட்டம் [Hulu Selangor District] கம்போங் தீமா எஸ்.கே.சி. [KampungTimah SKC] கிராமத்தில் கம்போங் தீமா எஸ்.கே.சி. வேல்முருகன் கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 51 கிமீ தொலைவு அல்லது புக்கிட் பெருந்தோங் [Bukit Beruntung] பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது புக்கிட் செந்தோசா [Bukit Sentosa] பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது ரவாங் [Rawang] பேருந்து நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவு அல்லது செரண்டா [Serendah] பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது ராசா [Bandar Rasa] பேருந்து நிலையத்திலிருந்து 24 கிமீ தொலைவு அல்லது பத்தாங்காலி [Batang Kali] பேருந்து நிலையத்திலிருந்து 30 கிமீ, உலு சிலாங்கூர் [Hulu Selangor] பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது கோலா குபு பாரு [Kuala Kubu Bharu] பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 62 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கம்போங் தீமா எஸ்.கே.சி. வேல்முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் வேல்முருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து அருளாட்சி செய்கின்றார்.
மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு சிலாங்கூர் மாவட்டம் கம்போங் தீமா எஸ்.கே.சி. வேல்முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா சிறப்புப் பூஜைகளுடன் நடைபெறுகின்றது. பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி திருவிழாவில் தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், மகா தீபாரதனைகள் நடக்கின்றன, 6-ம் நாள் மாலை சூரசம்ஹாரம், 7-ம் நாள் திருக்கல்யாணம் ந்டைபெற்று தொடர்ந்த மகா அன்னதானம் சிறப்பாக நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம் உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் போன்ற திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட எல்லா இந்து பண்டிகைகளும் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு சிலாங்கூர் மாவட்டம் கம்போங் தீமா எஸ்.கே.சி. வேல்முருகன் கோவில் உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்றத் திருக்கோவிலாகும்.
தல அமைப்பு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் உலு சிலாங்கூர் மாவட்டம் கம்போங் தீமா எஸ்.கே.சி. வேல்முருகன் கோவில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் வேல்முருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் வேல், மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், மகா மாரியம்மன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, நவராத்திரி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம்
பிரார்த்தனை:
தடங்கல்கள் நீங்க, ஞானம் மேம்பட, வேண்டியது நிறைவேற, வினைகள் விலக, சகல பிணிகள் போக்க, சந்தான பாக்கியம் உண்டாக, உடல் சீராக வேண்டி, நல்லன அருள, மன நிம்மதி கிடைக்க, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, தோஷங்கள் அகல்
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
ஞானம் மேம்பட அருளும் மலேசியா சிலாங்கூர் கம்போங் தீமா எஸ்.கே.சி. வேல்முருகனை போற்றி வணங்குவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment