கோவில் 1686 மலேசியா சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா திருமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1686
சகல செல்வங்களையும் அருளும் மலேசியா சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா திருமுருகன் கோவில்
19.01.2026 திங்கள்
அருள்மிகு திருமுருகன் திருக்கோவில்
15, Jalan 1/6, Seksyen 1
சுங்கை வே [Sungai Way]
46000 பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya]
பெட்டாலிங் மாவட்டம் [Petaling District]
சிலாங்கூர் மாநிலம் [Selangor State]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 10 கிமீ, சுபாங் ஜெயா [Subang Jaya] 13 கிமீ, பூச்சோங் [Puchong] 13 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 18 கிமீ, கஜாங் [Kajang] 27 கிமீ, சுங்கை பூலோ [Sungai Buloh] 29 கிமீ
மூலவர்: திருமுருகன்
உற்சவர்: திருமுருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] பெட்டாலிங் ஜெயா மாவட்டம் [Raub District] தலைநகரம் பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] நகரில் பெட்டாலிங் ஜெயா திருமுருகன் கோவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவு அல்லது சுபாங் ஜெயா [Subang Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது பூச்சோங் [Puchong] பேருந்து நிலையத்திலிருந்து 13 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவு அல்லது கஜாங் [Kajang] பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது சுங்கை பூலோ [Sungai Buloh] பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பெட்டாலிங் ஜெயா திருமுருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் திருமுருகன் கையில் வேலுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றார்..
மலேசியா சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் ஜெயா மாவட்டம் பெட்டாலிங் ஜெயா திருமுருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் முக்கியத் திருவிழாவாக சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி திருவிழா தினசரி அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் என 7 நாட்கள் நடைபெறுகின்றது. சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாம். மேலும் இத்திருக்கோவிலில் திருமுருகனுக்கு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம் உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் போன்ற திருநாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் ஜெயா மாவட்டம் பெட்டாலிங் ஜெயா திருமுருகன் கோவில் பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்றக் கோவிலாகும்..
தல அமைப்பு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் ஜெயா மாவட்டம் பெட்டாலிங் ஜெயா திருமுருகன் கோவிலில் அழகிய கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள் அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் திருமுருகன் வேலுடன் வலது திருக்கரத்தை அபயகரம் நீட்டியும், இடது திருக்கரத்தை ஒயிலாக இடுப்பில் வைத்தப்படியும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், சிவபெருமான் மாரியம்மன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, நவராத்திரி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம்
பிரார்த்தனை:
சகல செல்வங்களையும் அருள, நேர்மறை எண்ணங்கள் உண்டாக, வேண்டியது நடைபெற, வினைகள் அகல, பிணிகள் தீர, மாங்கல்ய பாக்கியம் கிட்ட, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, நல்லன நடைபெற, மன அமைதி கிட்ட, கஷ்டங்க்ள் விலக, தோஷங்கள் போக்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6.45 முதல் மாலை 8.15
நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும் மலேசியா சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா திருமுருகன் திருவடிகள் பணிந்து வேண்டுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1686 சகல செல்வங்களையும் அருளும் மலேசியா சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயா திருமுருகன்
Comments
Post a Comment