கோவில் 1690 - மலேசியா சிலாங்கூர் பண்டார் சன்வே சுப்பிரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1690

மங்கல வாழ்வு அருளும் மலேசியா சிலாங்கூர் பண்டார் சன்வே சுப்பிரமணியர் கோவில்

23.01.2026 வெள்ளி


அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோவில்

Jalan PJS 7/13

46150 பண்டார் சன்வே [Bandar Sunway/ Sunway City]

47000 சுபாங் ஜெயா [Subang Jaya]

பெட்டாலிங் மாவட்டம் [Petaling District]

சிலாங்கூர் மாநிலம் [Selangor State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 14 கிமீ, பூச்சோங் [Puchong] 6 கிமீ, சுபாங் ஜெயா [Subang Jaya] 8 கிமீ, பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] 9 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 14 கிமீ, சுங்கை பூலோ [Sungai Buloh] 25 கிமீ, கஜாங் [Kajang] 27 கிமீ, கோம்பாக் [Gombak] 28 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 29 கிமீ

மூலவர்: சுப்பிரமணியர்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை

கும்பாபிஷேகம்: 23.06.2013


தல மகிமை:

மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] பெட்டாலிங் மாவட்டம் [Petaling District] சுபாங் ஜெயா [Subang Jaya] மாநகராட்சியில் இருக்கும் பண்டார் சன்வே [Bandar Sunway/ Sunway City] நகரில் மங்கல வாழ்வு அருளும் பண்டார் சன்வே சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகம் 23.06.2013-ல் நடைபெற்றது.

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது பூச்சோங் [Puchong] பேருந்து நிலையத்திலிருந்து 6 கிமீ தொலைவு அல்லது சுபாங் ஜெயா [Subang Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவு அல்லது பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 9 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ தொலைவு அல்லது சுங்கை பூலோ [Sungai Buloh] பேருந்து நிலையத்திலிருந்து 25 கிமீ தொலைவு அல்லது கஜாங் [Kajang] 27 கிமீ கோம்பாக் [Gombak] பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது புத்ராஜெயா [Putrajaya] பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் பண்டார் சன்வே சுப்பிரமணியர் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி புரிகின்றார்.


மலேசியா சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் மாவட்டம் பண்டார் சன்வே சுப்பிரமணியர் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா 13 நாட்கள் ஒவ்வொரு ஆண்டும் வெகுச் சிறப்பாக நடைபெறுகின்றது. இத்திருவிழாவில் தேரோட்டம் முக்கிய நிகழ்வாகும். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் முதலிய திருவிழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. கந்த சஷ்டி திருவிழா விமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் இத்திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மாசி மகம் உள்ளிட்ட அனைத்துத் திருவிழாக்களும் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை நன்னாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி உள்ளிட்ட அனைத்து இந்து பண்டிகைகளும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெறுகின்றன.


தல வரலாறு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் மாவட்டம் பண்டார் சன்வே சுப்பிரமணியர் கோவில் இப்பகுதி தமிழர்கள் மற்றும் புரவலர்கள் பேருதவியுடன் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. 2013-ல் அறங்காவலர் குழு தலைவர் திரு. தத்தோ R மணிவாசகன் அவர்கள் தலைமையில் 7 நிலை கோபுரம் மற்றும் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மூலவர் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை சிலைகள் பிரதிஶ்டை செய்யப்பட்டு 23.06.2013-ல் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக ந்டைபெற்றது.

தல அமைப்பு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் பெட்டாலிங் மாவட்டம் பண்டார் சன்வே சுப்பிரமணியர் கோவிலில் 7 நிலை ராஜகோபுரம், பிற கோபுரங்கள், கோவில் சிற்பங்கள் அழகுற அமைந்துள்ளன. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் சுப்பிரமணியர் கையில வேலேந்தி வள்ளி, தெய்வானை சமேதராக திருக்கல்யாண கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மூலவர் சுப்பிரமணியர் அபயக்கரம் நீட்டி, மயில் பின் நிற்க அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் கொடிமரம், மயில், பலிபீடம் உள்ளன. மகா கணபதி, உற்சவர், கோஷ்ட மூர்த்திகள், சிவபெருமான், மாரியம்மன், நவக்கிரகங்கள் உட்பட எல்லா பரிவார தெய்வங்களும் இத்திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, மாசி மகம், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மங்கல வாழ்வு பெற்றிட, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க, நினைத்தது நடக்க, வினைகள் அகல, பிணிகள் விலக, திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் வேண்டி, குடும்ப வாழ்வு சிறக்க, உடல் ஆரோக்கியம் உண்டாக, தொழில் சிறக்க,

தீமைகள் விலகிட, செல்வங்கள் பெருக, நல்லன அருள, மன அமைதி கிட்ட, தோஷங்கள் போக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6.30-11.30 மாலை 6.30-9.30


நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் மலேசியா சிலாங்கூர் பண்டார் சன்வே சுப்பிரமணியரை போற்றிப் பணிவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1690 மங்கல வாழ்வு அருளும் மலேசியா சிலாங்கூர் பண்டார் சன்வே சுப்பிரமணியர்


படம் 2 - 1690 நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க அருளும் மலேசியா சிலாங்கூர் பண்டார் சன்வே சுப்பிரமணியர்


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்