கோவில் 1689 - மலேசியா சிலாங்கூர் கிள்ளான் தண்டாயுதபாணி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1689
வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் மலேசியா சிலாங்கூர் கிள்ளான் தண்டாயுதபாணி கோவில்
22.01.2026 வியாழன்
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில்
[அ/மி Klang நாட்டுக்கோட்டை செட்டியார் தண்டாயுதபாணி திருக்கோவில் & அ/மி ராஜ ராஜேஸ்வரி திருக்கோவில்]
No. 2, Jalan Bukit Jawa
41000 கிள்ளான் [Klang]
கிள்ளான் மாவட்டம் [Klang District]
சிலாங்கூர் மாநிலம் [Selangor State]
மலேசியா [Malaysia]
இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 33 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 12 கிமீ, சுபாங் ஜெயா [Subang Jaya] 22 கிமீ, பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] 29 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 48 கிமீ, கோம்பாக் [Gombak] 48 கிமீ, ஹுலு லங்காட் [Hulu Langat] 50 கிமீ, ரவாங் [Rawang] 52 கிமீ
மூலவர்: தண்டாயுதபாணி
மூலவர் 2: ராஜ ராஜேஸ்வரி
உற்சவர்: தண்டாயுதபாணி
தல மகிமை:
மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] கிள்ளான் மாவட்டம் [Klang District] கிள்ளான் [Klang] நகரில் வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் கிள்ளான் தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ராஜ ராஜேஸ்வரி அம்மனும் முக்கிய மூலவராக வீற்றிருந்து அருள்பாலிப்பதால் இக்கோவில் & அ/மி ராஜ ராஜேஸ்வரி திருக்கோவில் என்றும், நகரத்தார் சமூகத்தினர் இக்கோவிலை ஆரம்பித்து, நிர்வகித்து வருவதால், அ/மி Klang நாட்டுக்கோட்டை செட்டியார் தண்டாயுதபாணி திருக்கோவில் என்றும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam] பேருந்து நிலையத்திலிருந்து 12 கிமீ தொலைவு அல்லது சுபாங் ஜெயா [Subang Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு அல்லது பெட்டாலிங் ஜெயா [Petaling Jaya] பேருந்து நிலையத்திலிருந்து 29 கிமீ தொலைவு அல்லது புத்ராஜெயா [Putrajaya] பேருந்து நிலையத்திலிருந்து 48 கிமீ தொலைவு அல்லது கோம்பாக் [Gombak] பேருந்து நிலையத்திலிருந்து 48 கிமீ தொலைவு அல்லது ஹுலு லங்காட் [Hulu Langat] பேருந்து நிலையத்திலிருந்து 50 கிமீ, உலு சிலாங்கூர் [Hulu Selangor] பேருந்து நிலையத்திலிருந்து 33 கிமீ தொலைவு அல்லது ரவாங் [Rawang] பேருந்து நிலையத்திலிருந்து 22 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் கிள்ளான் தண்டாயுதபாணி கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் தண்டாயுதபாணி கையில் வேலேந்தி ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார்.
மலேசியா சிலாங்கூர் மாநிலம் கிள்ளான் மாவட்டம் கிள்ளான் தண்டாயுதபாணி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூசம் இத்திருக்கோவிலின் முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் காவடி சுமந்து வந்து கிள்ளான் தண்டாயுதபாணியை வழிபட்டு வேண்டும் வரங்களை பெற்றுச் செல்கின்றனர். மற்ற முருகப்பெருமான் கோவில்களை போலவே கந்த சஷ்டி திருவிழாவிமரிசையாக நடைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம் உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி போன்ற நாட்களில் விசேஷ பூஜைகள் நடக்கின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட எல்லா இந்து பண்டிகைகளும் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
தல வரலாறு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் கிள்ளான் மாவட்டம் கிள்ளான் தண்டாயுதபாணி கோவில் காரைக்குடி பகுதியிலிருந்து வாணிபம் செய்ய இப்பகுதிக்கு வந்த நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரால் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
தல அமைப்பு:
மலேசியா சிலாங்கூர் மாநிலம் கிள்ளான் மாவட்டம் கிள்ளான் தண்டாயுதபாணி கோவில் தமிழகத்து கோவில்களை போலவே அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் தண்டாயுதபாணி வேலேந்தி பொலிவான திருக்கோலத்தில் பக்தர்களுக்கு ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் மற்றொரு கருவறையில் ராஜ ராஜேஸ்வரி கருணையே வடிவமாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர்கள், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், சொர்ண ஆகர்ஷண பைரவர் உடன் பைரவி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, நவராத்திரி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி
பிரார்த்தனை:
வேண்டும் வரங்கள் பெற்றிட, பிணிகள் நீங்க, வினைகள் போக்க, கல்வி, ஞானம் சிறக்க, தொழில், வியாபாரம் மேம்பட, குழந்தைப்பேறு வேண்டி, நோய்கள் குணமாக, நல்லன நடைபெற, மன தைரியம் பெற்றிட, அல்லல்கள் அகல, தோஷங்கள் விலக
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
பிணிகள் நீக்கியருளும் மலேசியா சிலாங்கூர் கிள்ளான் தண்டாயுதபாணியை மனமுருகி வேண்டி வழிபடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
சைவ சித்தாந்தச் சுடர்
சைவ நெறிச் செம்மல்
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
bamikumar@gmail.com
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1689 வேண்டும் வரங்களை அள்ளி வழங்கும் மலேசியா சிலாங்கூர் கிள்ளான் தண்டாயுதபாணி
Comments
Post a Comment