கோவில் 1687 - மலேசியா சிலாங்கூர் சுங்கை பீலேக் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻

தினம் ஒரு முருகன் ஆலயம்-1687

மன அமைதி தரும் மலேசியா சிலாங்கூர் சுங்கை பீலேக் முருகன் கோவில்

20.01.2026 செவ்வாய்


அருள்மிகு முருகன் திருக்கோவில்

Jalan 15

43900 சுங்கை பீலேக் [Sungai Pelek]

சிப்பாங் மாவட்டம் [Sepang District]

சிலாங்கூர் மாநிலம் [Selangor State]

மலேசியா [Malaysia]


இருப்பிடம்: கோலாலம்பூர் [Kuala Lumpur] 66 கிமீ, சிப்பாங் [Sepang] 15 கிமீ, புத்ராஜெயா [Putrajaya] 43 கிமீ, கஜாங் [Kajang] 45 கிமீ, ஹுலு லங்காட் [Hulu Langat] 61 கிமீ, சா ஆலாம் [Shah Alam] 62 கிமீ, பெட்டாலிங் [Petaling] 62 கிமீ, கிள்ளான் [Klang] 71 கிமீ

மூலவர்: முருகன்

உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை


தல மகிமை:

மலேசியா நாட்டில் மேற்கே அமைந்துள்ள சிலாங்கூர் மாநிலம் [Selangor State] சிப்பாங் மாவட்டம் [Sepang District] சுங்கை பீலேக் [Sungai Pelek] நகரில் மன அமைதி தரும் சுங்கை பீலேக் முருகன் கோவில் அமைந்துள்ளது.

இத்திருக்கோவில் கோலாலம்பூர் [Kuala Lumpur] பேருந்து நிலையத்திலிருந்து 66 கிமீ தொலைவு அல்லது சிப்பாங் [Sepang] பேருந்து நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவு அல்லது புத்ராஜெயா [Putrajaya] பேருந்து நிலையத்திலிருந்து 43 கிமீ தொலைவு அல்லது கஜாங் [Kajang] பேருந்து நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவு அல்லது ஹுலு லங்காட் [Hulu Langat] பேருந்து நிலையத்திலிருந்து 61 கிமீ தொலைவு அல்லது சா ஆலாம் [Shah Alam பேருந்து நிலையத்திலிருந்து] 62 கிமீ தொலைவு அல்லது பெட்டாலிங் [Petaling] 62 பேருந்து நிலையத்திலிருந்து கிமீ தொலைவு அல்லது கிள்ளான் [Klang] பேருந்து நிலையத்திலிருந்து 71 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சுங்கை பீலேக் முருகன் கோவிலை அடையலாம். இத்திருக்கோவிலில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானை சமேதராக அருளாட்சி புரிகின்றார்.


மலேசியா சிலாங்கூர் மாநிலம் சிப்பாங் மாவட்டம் சுங்கை பீலேக் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுகின்றது. பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கந்த சஷ்டி திருவிழா தினசரி சிறப்பு பூஜைகள், 6-ம் நாள் சூரசம்ஹாரம், 7-ம் நாள் திருக்கல்யாணம் என சிறப்பாக ந்டைபெறுகின்றது. மேலும் முருகப்பெருமானுக்கு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம் உள்ளிட்ட எல்லா திருவிழாக்களும் இத்திருக்கோவிலில் சிறப்புப் பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன. சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம் போன்ற திருநாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. தமிழ், ஆங்கில வருட பிறப்பு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, மகா சிவராத்திரி, நவராத்திரி உள்ளிட்ட எல்லா இந்து பண்டிகைகளும் சிறப்பாக நடக்கின்றன.


தல வரலாறு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் சிப்பாங் மாவட்டம் சுங்கை பீலேக் முருகன் திருக்கோவில் பெட்டாலிங் பகுதியில் அமைந்துள்ள முக்கியமான திருக்கோவிலாகும்.

தல அமைப்பு:

மலேசியா சிலாங்கூர் மாநிலம் சிப்பாங் மாவட்டம் சுங்கை பீலேக் முருகன் கோவில் ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது. இத்திருக்கோவில் கருவறையில் மூலவர் முருகன் கையில் வேலுடன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிரில் மயில், பலிபீடம் உள்ளன. மேலும் இத்திருக்கோவிலில் விநாயகர், உற்சவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான், மாரியம்மன், நவக்கிரகங்கள் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்ரா பௌர்ணமி, மாசி மகம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, நவராத்திரி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினம், சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம்


பிரார்த்தனை:

மன அமைதி பெற, இடர்கள் களைய, கேட்டது கிடைக்க, வல்வினைகள் நீங்க, பிணிகள் தீர, குழந்தைப்பேறு கிட்ட, உடல் ஆரோக்கியம் வேண்டி, நல்லன நடக்க், மன மகிழ்ச்சி உண்டாக, ஆனந்தம் பெருக, தொழில் மேம்பட, தோஷங்கள் விலக


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


இடர்கள் களைய அருளும் மலேசியா சிலாங்கூர் சுங்கை பீலேக் முருகனை மனமுருக பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

சைவ சித்தாந்தச் சுடர்

சைவ நெறிச் செம்மல்

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

bamikumar@gmail.com

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1687 மன அமைதி தரும் மலேசியா சிலாங்கூர் சுங்கை பீலேக் முருகன்


படம் 2 - 1687 இடர்கள் களைய அருளும் மலேசியா சிலாங்கூர் சுங்கை பீலேக் முருகன் கோவில்

Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்