கோவில் 898 - ஹைதராபாத் குக்கட்பள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-898 செல்வம் பெருக அருளும் ஹைதராபாத் குக்கட்பள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில் 23.11.2023 வியாழன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் APHP Colony குக்கட்பள்ளி (Kukatpally) ஹைதராபாத்-500072 தெலுங்கானா மாநிலம் இருப்பிடம்: செகந்தராபாத் ரயில் நிலையம் 17 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத் மாநகர ரயில் நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள ஹைதராபாத் குக்கட்பள்ளியில் இருக்கும் APHP Colony-யில் செல்வம் பெருக அருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மூலவரான சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார். நாக தெய்வங்கள் குடியமர்ந்து அருள்புரிவதால் நாக தோஷம் நீங்கும் அருள் தலமாக இருப்பது சிறப்பம்சமாகும். செவ்வாய்க்கிழமைகளில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். கார்த்திகை, சஷ்டி தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாக சதுர்த்தியன்றும் அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்து சிறப்பு பூஜைகள் செய்க...