கோவில் 894 - ஆந்திரா அம்மகிரிபள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-894
இகபர நலன்கள் தந்து அருளும் ஆந்திரா அம்மகிரிபள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில்
19.11.2023 ஞாயிறு
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
அம்மகிரிபள்ளி-517112 [Ammagiripalle]
சித்தூர் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசம் மாநிலம்
இருப்பிடம்: சித்தூர் 59 கிமீ, பாகலா 34 கிமீ
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தேவியர்: வள்ளி, தெய்வானை
தலமகிமை:
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் சித்தூர் நகரிலிருந்து 59 கிமீ தொலைவில் இகபர நலன் அருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானை சமேதராக திருக்காட்சியருளும் அம்மகிரிபள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில் பாகலா நகர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து 34 கிமீ தொலைவில் உள்ளது.
இக்கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா விமரிசியாக நடைபெறுகிறது. கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல வரலாறு:
பழமையான இந்தத் திருக்கோவில் இவ்வூர் புரவலர்கள் மற்றும் பக்தர்களால் கட்டப்பட்டது.
தல அமைப்பு:
அழகிய கோடிமரமும், மயிலும் உள்ள இக்கோவில் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வேல் மற்றும் சேவற்கொடியுடன் நின்ற திருக்கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கணபதி தனி சந்நிதியில் அருள்கின்றார், மேலும் சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் பரிவார தெய்வங்களும் அருள்கின்றனர்.
திருவிழா:
ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
இகபர நலன் வேண்டி, எண்ணங்கள் ஈடேற, இல்வாழக்கை அமைய, குழந்தைவரம் வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, ஐஸ்வர்யம் பெருக, பிணிகள் அகல, தீராத நோய்கள் குணமாக
நேர்த்திக்கடன்:
அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்
எண்ணிய எண்ணங்கள் ஈடேற அருளும் ஆந்திரா அம்மகிரிபள்ளி சுப்பிரமணிய சுவாமியை மனமுருகி பிரார்த்திப்போம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 894 இகபர நலன்கள் தந்து அருளும் ஆந்திரா அம்மகிரிபள்ளி சுப்பிரமணிய சுவாமி
படம் 2 - 894 எண்ணிய எண்ணங்கள் ஈடேற அருளும் ஆந்திரா அம்மகிரிபள்ளி சுப்பிரமணிய சுவாமி
Comments
Post a Comment