கோவில் 892 - ஆந்திரா சித்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-892

கால சர்ப்ப தோஷ நிவர்த்தி பெற அருளும் ஆந்திரா சித்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

17.11.2023 வெள்ளி


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

பாலாஜி நகர் காலனி

சித்தூர்-517002

சித்தூர் மாவட்டம்

ஆந்திரப் பிரதேசம் மாநிலம்

இருப்பிடம்: சித்தூர் பேருந்து நிலையம் 1 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை


தலமகிமை:

ஆந்திர மாநிலம் சித்தூர் நகரம் சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள கிரீம்ஸ் பேட்டையில் இருக்கும் செங்கல்வராய மலையில் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி பெற அருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சகிதம் அருள்புரிவது சிறப்பம்சம். சுப்பிரமணிய சுவாமி கருவறைக்கு முன் மயிலுக்கு பதில் யானை வீற்றிருப்பது இக்கோவிலின் விசேஷம்.


இக்கோவிலில் தைப்பூசம், திருக்கார்த்திகை தீபம், ஆடிக்கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, கந்த சஷ்டி திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. கால சர்ப்ப தோஷ நிவாரண பூஜை இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுவதால், அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். பௌர்ணமி, செவ்வாய், சஷ்டி, கிருத்திகை நாட்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. இக்கோவிலில் பௌர்ணமியில் கிரிவலம் வருவது விசேஷம்.


தல வரலாறு:

இந்திரன் தனது மகள் தெய்வானை கல்யாணத்துக்காக அளித்த யானை இக்கோவிலில் வாகனமாக உள்ளதால், இக்கோவில் பழமையானதாக கருதப்படுகிறது.


தல அமைப்பு:

இக்கோவிலின் வாயிலில் கொடிமரம் உள்ளது. கருவறையில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானுக்கு முன்னால் மயிலுக்கு பதில் யானை வீற்றுள்ளது. மேலும் விநாயகர், ஆஞ்சநேயர், சிவன் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்புரிகின்றனர்.


திருவிழா:

ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி, சித்ரா பௌர்ணமி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், பௌர்ணமி


பிரார்த்தனை:

கால சர்ப்ப தோஷ நிவர்த்தி பெற, துன்பங்கள் நீங்க, தோஷங்கள் அகல, நல்லன நடைபெற, திருமணம் வேண்டி, குழந்தை வேண்டி, எண்ணியது நடக்க


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திறக்கும் நேரம்:

காலை 6.30-10.30 மாலை 5-7


துன்பங்கள் நீங்க அருளும் ஆந்திரா சித்தூர் சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 892 கால சர்ப்ப தோஷ நிவர்த்தி பெற அருளும் ஆந்திரா சித்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்