கோவில் 898 - ஹைதராபாத் குக்கட்பள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-898

செல்வம் பெருக அருளும் ஹைதராபாத் குக்கட்பள்ளி சுப்பிரமணிய சுவாமி கோவில்

23.11.2023 வியாழன்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

APHP Colony

குக்கட்பள்ளி (Kukatpally)

ஹைதராபாத்-500072

தெலுங்கானா மாநிலம்

இருப்பிடம்: செகந்தராபாத் ரயில் நிலையம் 17 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

தெலுங்கானா மாநிலம் செகந்தராபாத் மாநகர ரயில் நிலையத்திலிருந்து 17 கிமீ தொலைவில் உள்ள ஹைதராபாத் குக்கட்பள்ளியில் இருக்கும் APHP Colony-யில் செல்வம் பெருக அருளும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் மூலவரான சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார். நாக தெய்வங்கள் குடியமர்ந்து அருள்புரிவதால் நாக தோஷம் நீங்கும் அருள் தலமாக இருப்பது சிறப்பம்சமாகும்.


செவ்வாய்க்கிழமைகளில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். கார்த்திகை, சஷ்டி தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாக சதுர்த்தியன்றும் அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். சுப்பிரமணிய சுவாமியின் இதர திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.


தல வரலாறு:

ஹைதராபாத், செகந்தராபாத் நகரங்களில் வசிக்கும் புரவலர்கள், முருக பக்தர்கள் பேருதவியுடன் இக்கோவில் கட்டப்பட்டது.


தல அமைப்பு:

அழகிய திருக்கோவிலின் கருவறையில் சுப்பிரமணிய சுவாமி மூலவராக வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகப்பெருமானுக்கு எதிரில் மயில் மற்றும் பலிபீடம் உள்ளன. மேலும் கணபதி, சிவபெருமான். கனகதுர்க்கை, ஐயப்பன், ஆஞ்சநேயர், தத்தேத்ராயா சுவாமி, சாய்பாபா, நாகராஜன், நாகதேவி நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்கள் தனித் தனி சந்நிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, நாக சதுர்த்தி


பிரார்த்தனை:

செல்வம் பெருக, எண்ணியது ஈடேற, சர்ப்ப தோஷம், அனைத்து தோஷங்கள் விலக, திருமணத்தடை அகல, குழந்தை வேண்டி, குடும்ப ஒற்றுமை ஓங்க, பிணிகள் நீங்க,


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல், பொருள் காணிக்கை


திறக்கும் நேரம்

காலை 6-11 மாலை 5-8


எண்ணியது ஈடேற அருளும் ஹைதராபாத் குக்கட்பள்ளி சுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 898 செல்வம் பெருக அருளும் ஹைதராபாத் குக்கட்பள்ளி சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 898 எண்ணியது ஈடேற அருளும் ஹைதராபாத் குக்கட்பள்ளி சுப்பிரமணிய சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்