கோவில் 896 - ஆந்திரா விஜயவாடா சத்யநாராயணபுரம் சுப்பிரமணியேஸ்வர சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-896

செவ்வாய் தோஷம் நீக்கும் ஆந்திரா விஜயவாடா சத்யநாராயணபுரம் சுப்பிரமணியேஸ்வர சுவாமி கோவில்

21.11.2023 செவ்வாய்


அருள்மிகு சுப்பிரமணியேஸ்வர சுவாமி திருக்கோவில்

சிவராவ் தெரு

சத்யநாராயணபுரம்

விஜயவாடா-520011

விஜயவாடா மாவட்டம்

ஆந்திரப் பிரதேசம் மாநிலம்

இருப்பிடம்: விஜயவாடா பேருந்து நிலையம்/ரயில் நிலையம் 3 கிமீ


மூலவர்: சுப்பிரமணியேஸ்வர சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

ஆந்திர மாநிலம் விஜயவாடா மாநகரம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் இருக்கும் சத்யநாராயணபுரம் பகுதியில் உள்ள சிவராவ் தெருவில் செவ்வாய் தோஷம் நீக்கி, திருமணம் நடைபெற அருளும் சுப்பிரமணியேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மூலவரான சுப்பிரமணியேஸ்வர சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்புரிகின்றார். ராகு, கேது, பிற தோஷங்களையும் நீக்கும் திருத்தலமாக இத்திருத்தலம் விள்ங்குகிறது.


இக்கோவிலில் கிருத்திகை, சஷ்டி, செவ்வாய்க்கிழமை உள்ளிட்ட அனைத்து விசேஷங்களும் சிறப்பு வழிபாடுகளுடன் நடைபெறுகின்றன. ராகு, கேது பூஜைகள் அதிக அளவில் நடக்கின்றன.

தல வரலாறு:

சத்யநாராயணபுரம் சுப்பிரமணியேஸ்வர சுவாமி கோவில் உள்ளூர் பக்தர்களால் நிறுவப்பட்டது.


தல அமைப்பு:

இக்கோவில் திருக்கருவறையில் மூலவர் முருகப்பெருமான், சுப்பிரமணியேஸ்வர சுவாமியாக ஆறுத் திருமுகங்கள், 12 திருக்கரங்களுடன், கையில் வேல், சேவற்கொடி ஏந்தி வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் கணபதி, சிவபெருமான், ராகு, கேது, நாகராஜன், நாக தெய்வங்கள் உட்பட பல தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்,


பிரார்த்தனை:

செவ்வாய் தோஷம் நீங்க, ராகு, கேது தோஷங்கள் அகல, பிற தோஷங்கள் அகன்றிட, திருமணம் நடைபெற, குழந்தை வேண்டி, மன மகிழ்ச்சி கிடைக்க, ஐஸ்வர்யம் பெருக, நோய்கள் குணமாக, பிணிகள் தீர


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


ராகு, கேது தோஷங்கள் அகல அருளும் ஆந்திரா விஜயவாடா சத்யநாராயணபுரம் சுப்பிரமணியேஸ்வர சுவாமியை வேண்டிக் கொள்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1- 896 செவ்வாய் தோஷம் நீக்கும் ஆந்திரா விஜயவாடா சத்யநாராயணபுரம் சுப்பிரமணியேஸ்வர சுவாமி


படம் 2 - 896 ராகு, கேது தோஷங்கள் அகல அருளும் ஆந்திரா விஜயவாடா சத்யநாராயணபுரம் சுப்பிரமணியேஸ்வர சுவாமி
 



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்