கோவில் 893 - ஆந்திரா பாகலா சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-893

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஆந்திரா பாகலா சுப்பிரமணிய சுவாமி கோவில்

18.11.2023 சனி


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

பாகலா -517112

திருப்பதி மாவட்டம்

ஆந்திரப் பிரதேசம் மாநிலம்

இருப்பிடம்: திருப்பதி 48 கிமீ, சித்தூர் 36 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டம் திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து 48 கிமீ தொலைவிலும் மற்றும் சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 36 கிமீ தொலைவிலும் உள்ள பாகலா நகரில் ஒரு சிறிய மலை மீது ஆரோக்கியத்தை அள்ளித் தரும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி அருள்புரிகின்றார். ஆந்திரா பக்தர்கள் மட்டுமின்றி தமிழக பக்தர்களும் சக்தி வாய்ந்த முருகப்பருமானை வழிபடுகிறார்கள்.

இக்கோவிலில் முருகப்பெருமானுக்குரிய திருவிழாக்கள் அனைத்தும் திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன. கார்த்திகை, சஷ்டி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.


தல வரலாறு:

பல ஆண்டுகளுக்கு முன்னால் ஆகச் சிறந்த முருக பக்தர் ஒருவர் கனவில் சுப்பிரமணிய சுவாமி தோன்றி, தான் மலையின் மேல் ஒரு சிலை வடிவில் இருப்பதாகவும், அங்கு ஒரு கோவில் எழுப்பும் படி கூறினாராம். அதன் படியே அவ்வூர் மலை மீது தேடிச் சென்ற போது சுப்பிரமணிய சுவாமி சிலையை கண்டதாகவும், பின்னர் அனைவர் உதவியுடனும் கோவில் எழுப்பியதாக செவி வழிச் செய்தி.


தல அமைப்பு:

மலையின் கீழ் உள்ள கல்யாண மண்டபத்தில் அதிக அளவு திருமணங்கள் நடைபெறுகின்றன. சுமார் 100 படிகள் ஏறினால் கோவிலை அடையலாம். கருவறையில் மூலவராக சுப்பிரமணிய சுவாமி நின்ற நிலையில் வீற்றிருந்து வள்ளி, தெய்வானையுடன் திருக்காட்சியருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விநாய்கர், சிவபெருமான், அம்பாள், நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

ஆடிக்கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்


பிரார்த்தனை:

ஆரோக்கியம் பெற, மன அமைதி கிடைக்க, கல்யாணத்தடை அகல, குழந்தை வேண்டி, வேண்டியது நிறைவேற


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


திறக்கும் நேரம்:

காலை 7-12 மாலை 4-7


மன அமைதி தந்தருளும் ஆந்திரா பாகலா சுப்பிரமணிய சுவாமியை அடி பணிந்து தொழுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 893 ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஆந்திரா பாகலா சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - 893 மன அமைதி தந்தருளும் ஆந்திரா பாகலா சுப்பிரமணிய சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்