கோவில் 895 - ஆந்திரா விஜயவாடா அய்யப்பன் நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻 

தினம் ஒரு முருகன் ஆலயம்-895

நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் ஆந்திரா விஜயவாடா அய்யப்பன் நகர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

20.11.2023 திங்கள்


அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

முதலாவது தெரு

அய்யப்பன் நகர்

விஜயவாடா-520007

விஜயவாடா மாவட்டம்

ஆந்திரப் பிரதேசம் மாநிலம்

இருப்பிடம்: விஜயவாடா பேருந்து நிலையம்/ரயில் நிலையம் 7/8 கிமீ


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விஜயவாடா மாநகரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள அய்யப்பன் நகர் முதலாவது தெருவில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சகிதம் அருளாட்சி புரிகின்றார். விஜயவாடா நகரம் மத்திய ரயில் நிலையத்திலிருந்து 8 கிமீ பிரயாணம் செய்தாலும் இத்திருக்கோவிலை அடையலாம்.


முருகப்பெருமானின் அனைத்துத் திருவிழாக்களும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகளுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.


தல வரலாறு:

விஜயவாடா நகரப் புரவலர்கள் மற்றும் உள்ளூர் முருகப் பக்தர்கள் பேருதவியுடன் சுப்பிரமணிய சுவாமிக்காக இக்கோவில் எழுப்ப்பபட்டது.


தல அமைப்பு:

இக்கோவில் கருவறையில் மூலவராக சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறையிலே இடதுபுறம் வள்ளிக்கு அருகில் கணபதியும், பெருமானின் வலது புறம் தெய்வானைக்கு அருகில் அம்மனும் வீற்றிருந்து அருள்புரிகின்றனர். மூலவருக்கு கீழ் நாகேந்திர சுவாமி அருளுகின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, மரத்தடியில் நாக தெய்வங்கள் மற்றும் பிற பரிவார தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய், பிரதோஷம், பௌர்ணமி


பிரார்த்தனை:

நேர்மறை ஆற்றல் அதிகரிக்க, நினைத்தது நடைபெற, நாக தோஷம், பிற தோஷங்கள் அகல, திருமணம் நடைபெற, குழந்தை பாக்கியம் கிட்ட, நல்லன நடைபெற


நேர்த்திக்கடன்:

அலங்காரம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் அணிவித்தல்


நினைத்தது நடைபெற அருளும் ஆந்திரா விஜயவாடா அய்யப்பன் நகர் சுப்பிரமணிய சுவாமி மனக்கண்ணால் தரிசிப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 895 நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் ஆந்திரா விஜயவாடா அய்யப்பன் நகர் சுப்பிரமணிய சுவாமி


படம் 2 - நினைத்தது நடைபெற அருளும் ஆந்திரா விஜயவாடா அய்யப்பன் நகர் சுப்பிரமணிய சுவாமி



Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்