Posts

Showing posts from February, 2023

கோவில் 631 - மலேசியா (Malaysia) பிரிஞ்சாங் (Brinchang) தெண்டாயுதபாணி சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-631 மன அமைதி தந்தருளும் மலேசியா (Malaysia) பிரிஞ்சாங் (Brinchang) தெண்டாயுதபாணி சுவாமி கோவில் 1.3.2023 புதன் அருள்மிகு தெண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பிரிஞ்சாங் (Brinchang) - 39100 கேமரன் மலை மாவட்டம் (Cameron Highlands District) பகாங் மாநிலம் (Pahang State) மலேசியா (Malaysia) இருப்பிடம்: கோலாலம்பூர் 210 கிமீ மூலவர்: தெண்டாயுதபாணி சுவாமி தலமகிமை: அதி தீவிர முருக பக்தர்கள் அதிகம் வாழும் மலேசியா நாட்டின் பகாங் மாநிலத்தில் உள்ள கேமரன் மலை மாவட்டத்தில் 5050 அடி உயரத்தில் உள்ள பிரிஞ்சாங் நகரத்தில் மிகவும் ஆற்றல் மிக்க தெண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் இக்கோவில்தான் மிகப்பெரியது. முருக பக்தர்கள் மட்டுமின்றி, சுற்றுலா வரும் பயணிகள் மத வேற்றுமையின்றி இக்கோவிலில் உள்ள தெண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு அனைத்து நற்பலன்களையும் பெற்று செல்கின்றனர். முருகப்பெருமானுக்கு சித்திரை திருவிழா (ச

கோவில் 265 - திண்டுக்கல் மாவட்டம் ஐவர் மலை குழந்தை வேலப்பர் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                             தினம் ஒரு முருகன் ஆலயம்-265 அற்புதங்கள் நிறைந்த திண்டுக்கல் மாவட்டம் ஐவர் மலை குழந்தை வேலப்பர் கோவில் 28.2.2022 திங்கள் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவில் ஐவர் மலை-624621 திண்டுக்கல் மாவட்டம்  இருப்பிடம்: பழனி-கொழுமம்-உடுமலைப்பேட்டை சாலையில் பாப்பம்பட்டி 15 கிமீ அங்கிருந்து 3 கிமீ ஐவர் மலை கோவில்  மூலவர்: குழந்தை வேலப்பர்  தலமகிமை: திண்டுக்கல் மாவட்டம் பழனி-கொழுமம் சாலையில் பாப்பம்பட்டியில் இருந்து 3 கிமீ தொலைவில் ஐவர்மலை உள்ளது. இந்த மலை, பல ஞானிகளையும், சித்தர்களையும் உருவாக்கி தந்துள்ளது. அதேபோல் சமணர்கள் இந்த மலையில் ஞானம் பெற்று முக்தி அடைந்துள்ளனர். மகாபாரத இதிகாசம் நடைபெற்ற துவாபார யுக காலத்தில், பஞ்சபாண்டவர்கள் தங்கள் நாட்டை இழந்து காடுகளில் வசித்தபோது, திரௌபதியுடன் இந்த மலையில் தங்கி இருந்ததால் இம்மலைக்கு ‘ஐவர் மலை’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இங்கு நிறுவப்பட்ட ஐவர் மலை திரௌபதி அம்மன் கோவில் மிகவும் விசே

கோவில் 264 - புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                     தினம் ஒரு முருகன் ஆலயம்-264 ஒற்றைக்கல்லாலான 900 ஆண்டுகள் பழமையான புதுக்கோட்டை மாவட்டம் கண்ணனூர் பாலசுப்பிரமணியர் கோவில் 27.2.2022 ஞாயிறு அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் கண்ணனூர்-622409 புதுக்கோட்டை மாவட்டம்  இருப்பிடம்: திருமயம்-கோவில் 11 கிமீ, புதுக்கோட்டை-கோவில் 25 கிமீ    மூலவர்: பாலசுப்பிரமணியர்  தலமகிமை: தமிழகத்தில் முருகனுக்கு எழுப்பப்பட்ட முதல் கற்கோவில் (கற்றளி கோவில்) புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் அருகேயுள்ள ஒற்றைக்கண்ணூர் என்ற தலத்தில், அமைந்துள்ளது.  மூவாயிரம் ஆண்டுகள் பழைமையும், 900 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்றளிக் கோவிலைக் கொண்ட பெருமையும் உடைய இயற்கை எழில் சூழ்ந்த இந்தத தலத்தில் முருகப்பெருமான் பாலசுப்பிரமணியர் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிகின்றார்.  வாசல் முதல் விமான கலசம் வரை அனைத்தும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளன. விமானம் சுற்றளவில் பெரியதாகவும், ஓரடுக்கு கொண்டதாகவும் உள்ளது. நான்கு மூலைகளி

கோவில் 630 - மொரீசியஸ் (Mauritius) ட்ரையோலெட் (Triolet) முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                       தினம் ஒரு முருகன் ஆலயம்-630 தீவினைகள் அகற்றும் மொரீசியஸ் (Mauritius) ட்ரையோலெட் (Triolet) முருகன் கோவில் 28.2.2023 செவ்வாய் அருள்மிகு முருகன் திருக்கோவில் Bedassy Lane ட்ரையோலெட் (Triolet) பாம்பிள்மௌசஸ் மாவட்டம் (Pamplwmousses District) மொரீசியஸ் (Mauritius) இருப்பிடம்: தலைநகர் போர்ட் லுயீஸ் (Port Louis) 13 கிமீ, பாம்பிள்மௌசஸ் (Pamplwmousses) 9 கிமீ மூலவர்: முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தலமகிமை: ட்ரையோலெட் மொரீசியஸ் தீவின் வடக்கே பாம்பிள்மௌசஸ் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். மொரீசியஸ் தீவின் தலைநகர் போர்ட் லுயீஸிலிருந்து 13 கிமீ தொலைவில் ட்ரையோலெட் நகரில் முருகன் கோவில் கரும்பு வயல்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. பாம்பிள்மௌசஸ் நகரிலிருந்து 9 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிக்கொண்டிருக்கும் முருகப்பெருமான் மிகவும் ஆற்றல் மிக்கவராக அருள்பாலிக்கின்றார். இந்நகருக்கு இந்தியா

கோவில் 629 - மொரீசியஸ் (Mauritius) பெல் ஏர் (Bel Air Riviere Seche) சிவசுப்ரமணியர் கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                 தினம் ஒரு முருகன் ஆலயம்-629 கேட்டதை வழங்கும் மொரீசியஸ் (Mauritius) பெல் ஏர் (Bel Air Riviere Seche) சிவசுப்ரமணியர் கோவில் 27.2.2023 திங்கள் அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோவில் பெல் ஏர் (Bel Air Riviere Seche/Bel Air) – B27 ஃப்லாக் மாவட்டம் (Flacq District) மொரீசியஸ் (Mauritius) இருப்பிடம்: தலைநகர் போர்ட் லுயீஸ் (Port Louis) 28 கிமீ, ஃப்லாக் 12 கிமீ மூலவர்: சிவசுப்ரமணியர் தலமகிமை: மொரீசியஸ் தலைநகர் போர்ட் லுயீஸிலிருந்து 28 கிமீ தொலைவிலும், ஃப்லாக் மாவட்டம் தலைநகர் ஃப்லாக்கிலிருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ள பெல் ஏர் கிராமத்தில் சிவசுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. தென்னிந்திய கட்டிடக் கலை அமைப்பில் இக்கோவில் அமைந்துள்ளது, இக்கோவிலில் மூலவராக சிவசுப்ரமணியர் அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், சிவபெருமான், அம்பாள், கோவிந்தன் முதலான தெய்வங்களும் அருளுவதும் சிறப்பம்சம். பங்குனி உத்திரத் திருவிழா, தைப்பூசத் திருவிழா இரண்டும் மிகவும்

கோவில் 263 - கோயம்புத்தூர் மாவட்டம் சென்னாமலை பாலமுருகன் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                                  தினம் ஒரு முருகன் ஆலயம்-263 சனிக்கிழமை & செவ்வாய்க்கிழமை மட்டுமே காட்சி தந்து அருளும் கோயம்புத்தூர் மாவட்டம் சென்னாமலை பாலமுருகன் கோவில் 26.2.2022 சனி அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் சென்னாமலை-641301 சிறுமுகை ரோடு மேட்டுப்பாளையம் அஞ்சல் கோயம்புத்தூர் மாவட்டம்  இருப்பிடம்: மேட்டுப்பாலைளையம் 6.5 கிமீ  மூலவர்: பாலமுருகன் அம்மன்: வள்ளி, தெய்வானை தலமகிமை: மேட்டுப்பாளையத்தில் ஈசான்ய மூலையில் அமைந்துள்ள இத்தலத்தில் ஈசனின் இளவல் முருகப்பெருமான் குடி கொண்டுள்ளார். பழநி முருகனைப் போல் இக்கோவில் பாலமுருகனும் மேற்குப் பார்த்து அருள்புரிவது சிறப்பு மிக்கதாகும். பழநியில் சண்முகா நதி ஓடுவது போல இங்கு பவானி ஆறு மலையின் அடிவாரத்தை தொட்டு செல்வது சிறப்பு. இக்கோவிலின் தனிச்சிறப்பு மற்றும் தனித்துவம், வாரத்தில் செவ்வாய், சனிக்கிழமைகளிலும், மற்றும் முக்கிய பண்டிகை தினங்களில் மட்டுமே திறந்திருக்கும். கிருத்திகையன்று பத்து வகையான விசேஷ

கோவில் 628 - மொரீசியஸ் (Mauritius) பெல்லே வியூ மவுரல் (Belle Vue Maurel) பாலசுப்ரமணியர் கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                 தினம் ஒரு முருகன் ஆலயம்-628 நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் மொரீசியஸ் (Mauritius) பெல்லே வியூ மவுரல் (Belle Vue Maurel) பாலசுப்ரமணியர் கோவில் 26.2.2023 ஞாயிறு அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவில் பெல்லே வியூ மவுரல் (Belle Vue Maurel) ரிவர் டியூ ராம்பர்ட் மாவட்டம் (Riviere du Rampart District) மொரீசியஸ் (Mauritius) இருப்பிடம்: தலைநகர் போர்ட் லுயீஸ் (Port Louis) 22 கிமீ, Riviere du Rampart 7 கிமீ மூலவர்: பாலசுப்ரமணியர் தலமகிமை: கந்த வேளை எந்த வேளையும் துதிப்போர்க்கு ஒரு நாளும் குறைவில்லை என்ற சொல்லுக்கேற்ப மொரீசியஸ் தலைநகர் போர்ட் லுயீஸிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள பெல்லே வியூ மவுரல் என்ற கிராமத்தில் முருகப்பெருமானுக்கென, பாலசுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கரும்பு தோட்டப் பகுதியில் உள்ளது, கிழக்கு கடற்கரையிலுள்ள பெல்லே வியூ மவுரல் பாலசுப்ரமணியர் கோவில், ரிவர் டியூ ராம்பர்ட் (Riviere du Rampart) மாவட்ட தலைநகரிலிருந்து 7

கோவில் 262 - நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில்

Image
 🙏🙏                                                                                                                                           தினம் ஒரு முருகன் ஆலயம்-262 தவ யோக முனிவர்கள் வாழ்ந்த புண்ணியத்தலம் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவில் 25.2.2022 வெள்ளி அருள்மிகு தத்தகிரி முருகன் திருக்கோவில் சேந்தமங்கலம்-637409 நாமக்கல் மாவட்டம்  இருப்பிடம்: நாமக்கல்லிருந்து 10 கிமீ  மூலவர்: தத்தகிரி முருகன் தலமகிமை: நாமக்கல்லிருந்து 10 கிமீ-ல் ஒரு சிறிய மலையின் மீது சேந்தமங்கலம் தத்தகிரி முருகன்  கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற தத்தாத்ரேயர் குகாலயம் அமைந்துள்ளது. பக்தி, தியானம் மூலமாக ஆத்மஞானம் பெற்ற பல முனிவர்கள், இங்கு தவத்தில் இருந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.  இக்கோவிலின் குகாலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத மகா சுவாமிகள் சந்நிதானம் உள்ளது. குகாலயத்திற்கு மேல் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய கடவுள்களை உள்ளடக்கிய தத்தாத்ரேயர் விக்கிரகம் செய்யப்பட்டது. தத்தாத்ரேயர் மும்மூர்த்திகளின் மையத்தில், சிவப்பெருமான் உருவம் அம

கோவில் 627 - பிரெஞ்சு பிராந்தியம் ரீயூனியன் தீவு செயிண்ட் லூயிஸ் சிவ சண்முகநாத சுவாமி கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                   தினம் ஒரு முருகன் ஆலயம்-627 அகிலெங்கும் அருளும் பிரெஞ்சு பிராந்தியம் ரீயூனியன் தீவு செயிண்ட் லூயிஸ் சிவ சண்முகநாத சுவாமி கோவில் 25.2.2023 சனி அருள்மிகு சிவ சண்முகநாத சுவாமி திருக்கோவில் 139, Rue Lambert செயிண்ட் லூயிஸ் (Saint Louis-97450) ரீயூனியன் தீவு (Reunion Island) பிரெஞ்சு பிராந்தியம் (France Region) மூலவர்: சிவ சண்முகநாத சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை உற்சவர்: சிவ சண்முகநாதர் வள்ளி, தெய்வானையுடன் தலமகிமை: இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு ரீயூனியன் தீவு ஆகும். இது பிரான்சின் வெளிநாட்டுத் துறை மற்றும் பிராந்தியமாகும். இது மடகாஸ்கர் தீவின் கிழக்கே 950 கிமீ தொலைவிலும், மொரீஷியஸ் தீவின் தென்மேற்கே 175 கிமீ தொலைவிலும்அமைந்துள்ளது. இது பிரெஞ்சு குடியரசின் ஒருங்கிணைந்த பகுதி. ரீயூனியன் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்புறப் பகுதியாகும். ரீயூனியன் தீவு, தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள ஒரே யூரோ மண்டலமாகும் . செயிண்ட் லூயிஸ், ரீய

கோவில் 261 - ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவு பாலதண்டாயுதபாணி கோவில்

Image
 🙏🙏                                                                                                                                                         தினம் ஒரு முருகன் ஆலயம்-261 கல்வி, ஞானம், செல்வம் அள்ளி வழங்கும் ஈரோடு மாவட்டம் கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவு பாலதண்டாயுதபாணி  கோவில் 24.2.2022 வியாழன் பாலதண்டாயுதபாணி திருக்கோவில் கொருமடுவு கெம்பநாயக்கன்பாளையம்-638503 ஈரோடு மாவட்டம்  இருப்பிடம்: சத்தியமங்கலத்திலிருந்து 15 கிமீ  மூலவர்: பாலதண்டாயுதபாணி  தலமகிமை: முருகப்பெருமான் விரும்பிக் குடியேறியத் தலம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுக்காவிலுள்ள கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவில் உள்ள பாலதண்டாயுதபாணி திருக்கோவிலாகும். பழனியைப் போலவே முருகப்பெருமான் மேற்கு நோக்கிய அருளும் தலம். திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்குள்ள முருகப்பெருமானை வணங்குகின்றனர். மூன்று கிருத்திகை தொடர்ந்து வேண்டினால் திருமண வரம் அருளும் நம்பிக்கை தெய்வம். இங்குள்ள தெய்வங்களுக்கு பக்தர்கள் தாங்களே நேரிடையாக பூப்போட்டு வணங்குவதும் இத்தலத்தின் சிறப்பு.  பொதுவாக ஈசனுக்கு இடப்பாகத்தில் ஈஸ்வர

கோவில் 626 - அமெரிக்கா லிபர்டி ஹில்ஸ் டெக்ஸாஸ் முருகன் கோவில்

Image
  🙏🏻 🙏🏻                                                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-626 தைப்பூசத் திருநாளை மிக சிறப்பாக் கொண்டாடும் அமெரிக்கா லிபர்டி ஹில்ஸ் டெக்ஸாஸ் முருகன் கோவில் 24.2.2023 வெள்ளி அருள்மிகு டெக்ஸாஸ் முருகன் திருக்கோவில் 775, Stubblefield Lane லிபர்டி ஹில்ஸ் (Liberty Hills) ஆஸ்டின் (Astin) டெக்ஸாஸ் மாநிலம் (Texas)-TX 78642 அமெரிக்கா (USA) இருப்பிடம்: லிபெர்டி ஹில்ஸ் 1 கிமீ, ஆஸ்டின் 36 கிமீ மூலவர்: முருகன் உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தலமகிமை: அமெரிக்கா (USA) நாட்டின் டெக்ஸாஸ் மாநிலத்தில் 174 கிமீ தொலைவில் உள்ள லிபர்டி ஹில்ஸ் பகுதியில் பிரசித்தி பெற்ற டெக்ஸாஸ் முருகன் திருக்கோவில் தற்காலிகமாக அமைந்துள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒரே முக்கியமான முருகன் திருக்கோவில் இதுவேயாகும். டெக்ஸாஸ் மாநிலம் தலைநகர் ஆஸ்டின் நகரில் உள்ள லிபர்டி ஹில்ஸில் மிகப் பிரம்மாண்டமாக டெக்ஸாஸ் முருகன் கோவில் கட்டப்பட்டு வருகின்றது என்பது சிறப்பு செய்தியாகும். டெக்ஸாஸ் வாழ் மக்கள் ப