கோவில் 626 - அமெரிக்கா லிபர்டி ஹில்ஸ் டெக்ஸாஸ் முருகன் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                     தினம் ஒரு முருகன் ஆலயம்-626

தைப்பூசத் திருநாளை மிக சிறப்பாக் கொண்டாடும் அமெரிக்கா லிபர்டி ஹில்ஸ் டெக்ஸாஸ் முருகன் கோவில்

24.2.2023 வெள்ளி

அருள்மிகு டெக்ஸாஸ் முருகன் திருக்கோவில்

775, Stubblefield Lane

லிபர்டி ஹில்ஸ் (Liberty Hills)

ஆஸ்டின் (Astin)

டெக்ஸாஸ் மாநிலம் (Texas)-TX 78642

அமெரிக்கா (USA)

இருப்பிடம்: லிபெர்டி ஹில்ஸ் 1 கிமீ, ஆஸ்டின் 36 கிமீ


மூலவர்: முருகன்

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன்


தலமகிமை:

அமெரிக்கா (USA) நாட்டின் டெக்ஸாஸ் மாநிலத்தில் 174 கிமீ தொலைவில் உள்ள லிபர்டி ஹில்ஸ் பகுதியில் பிரசித்தி பெற்ற டெக்ஸாஸ் முருகன் திருக்கோவில் தற்காலிகமாக அமைந்துள்ளது. டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒரே முக்கியமான முருகன் திருக்கோவில் இதுவேயாகும். டெக்ஸாஸ் மாநிலம் தலைநகர் ஆஸ்டின் நகரில் உள்ள லிபர்டி ஹில்ஸில் மிகப் பிரம்மாண்டமாக டெக்ஸாஸ் முருகன் கோவில் கட்டப்பட்டு வருகின்றது என்பது சிறப்பு செய்தியாகும். டெக்ஸாஸ் வாழ் மக்கள் பெரும் பொருளுதவியுடன் திருக்கோவில் வளர்ந்து வருகிறது.


அமெரிக்கா நாட்டில் கலிஃபோர்னியா மாநிலத்தில்தான் முதன்முறையாக தைப்பூச பாதயாத்திரை 2011-ல் தொடங்கப்பட்டது. 2019-ம் ஆண்டிலிருந்து டெக்ஸாஸ் முருகன் கோவிலிலும் தைப்பூச பாதயாத்திரை தொடங்கப்பட்டது கடந்த 4.2.23 அன்று டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள லிபர்டி ஹில்ஸ் டெக்ஸாஸ் முருகன் கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான முருகப்பெருமான் பக்தர்கள் குளிரையும் பொருட்படுத்தாமல் பால்குடம், காவடி, மாவிளக்கு எடுத்து சுமார் 25 கிமீ பாதயாத்திரை வந்து டெக்ஸாஸ் முருகப்பெருமானை வழிபட்டனர். இது போல் இக்கோவிலில் வைகாசி விசாகம், கிருத்திகை உட்பட முருகப்பெருமானின் அனைத்து விழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தல வரலாறு:

கலிஃபோர்னியா மாநிலத்திலிருந்தும், பிற இடங்களிலுமிருந்தும் புலம் பெயர்ந்து வந்த முருகப் பக்தர்களின் பேருழைப்புடன் டெக்ஸாஸ் முருகன் கோவில் கட்டப்பட்டது. தற்போது பெரிய அளவில் கட்டபட்டு வருகின்றது.


தல அமைப்பு:

திருக்கோவிலில் மூலவர் முருகப்பெருமான் ஒரு கையில் வேல் தாங்கி, மற்றொரு கையை இடுப்பில் ஒயிலாக வைத்து, மிகவும் அழகிய கோலத்தில் திருக்காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கிறார். விநாயகபெருமானும் வீற்றிருந்து அருள்புரிகின்றார். உற்சவர் முருகன் தேவியரோடு அருள்கின்றார்.


திருவிழா:

தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

அற்புதங்கள் நிகழ, கேட்டது கிடைக்க, கல்வி, ஞானம், தொழில் மேம்பட


நேர்த்திக்கடன்:

மாவிளக்கு, பால்குடம், காவடி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், பொருளுதவி


திறக்கும் நேரம்:

மாலை 5-7 (வார இறுதி 4-8)


அற்புதங்கள் பல நிகழ்த்தும் அமெரிக்கா லிபர்டி ஹில்ஸ் டெக்ஸாஸ் முருகனை மனமுருகி வணங்கிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 626 அற்புதங்கள் பல நிகழ்த்தும் அமெரிக்கா லிபர்டி ஹில்ஸ் டெக்ஸாஸ் முருகன்


படம் 2 - 626 தைப்பூசத் திருநாளை மிக சிறப்பாக் கொண்டாடும் அமெரிக்கா லிபர்டி ஹில்ஸ் டெக்ஸாஸ் முருகன் பாலாபிஷேகம்


Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்