கோவில் 631 - மலேசியா (Malaysia) பிரிஞ்சாங் (Brinchang) தெண்டாயுதபாணி சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                        தினம் ஒரு முருகன் ஆலயம்-631

மன அமைதி தந்தருளும் மலேசியா (Malaysia) பிரிஞ்சாங் (Brinchang) தெண்டாயுதபாணி சுவாமி கோவில்

1.3.2023 புதன்

அருள்மிகு தெண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்

பிரிஞ்சாங் (Brinchang) - 39100

கேமரன் மலை மாவட்டம் (Cameron Highlands District)

பகாங் மாநிலம் (Pahang State)

மலேசியா (Malaysia)

இருப்பிடம்: கோலாலம்பூர் 210 கிமீ

மூலவர்: தெண்டாயுதபாணி சுவாமி


தலமகிமை:

அதி தீவிர முருக பக்தர்கள் அதிகம் வாழும் மலேசியா நாட்டின் பகாங் மாநிலத்தில் உள்ள கேமரன் மலை மாவட்டத்தில் 5050 அடி உயரத்தில் உள்ள பிரிஞ்சாங் நகரத்தில் மிகவும் ஆற்றல் மிக்க தெண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் இக்கோவில்தான் மிகப்பெரியது. முருக பக்தர்கள் மட்டுமின்றி, சுற்றுலா வரும் பயணிகள் மத வேற்றுமையின்றி இக்கோவிலில் உள்ள தெண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு அனைத்து நற்பலன்களையும் பெற்று செல்கின்றனர்.


முருகப்பெருமானுக்கு சித்திரை திருவிழா (சித்ரா பவுர்ணமி) 3 நாட்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசம், கந்த சஷ்டி உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.


தல வரலாறு:

பகாங் மாநில வாழ் தமிழ் பக்தர்கள் (தேயிலை, ஸ்டாராபெர்ரி தோட்டத் தொழிலாளர்கள்) பொருளுதவியுடன் பிரிஞ்சாங் நகரில் 1930-களில் கட்டப்பட்ட தெண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் புனரமைக்கப்பட்டு, கோவில் கும்பாபிஷேகம் 12.04.1988-ல் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் டாக்டர் டத்தோ ச. சாமிவேலு அவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.


தல அமைப்பு:

அழகிய கோபுரம் கொண்ட இத்திருகோவிலுக்கு சுமார் 30 படிகள் ஏறி செல்லவேண்டும். கோவிலின் உள் அமைப்பும் புதியதாக புனரமைக்கப்பட்டதால், பொலிவுடன் இருப்பது சிறப்பம்சம். கோவிலுக்குள் நுழைந்தவுடன் கொடிக்கம்பம், பலிபீடம், மயில் அமைந்துள்ளன. எதிரில் உள்ள கருவறையில், மூலவராக முருகப்பெருமான், தெண்டாயுதபாணியாக கையில் வேல் ஏந்தி நின்ற கோலத்தில் ஞானமே வடிவாக பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகப்பெருமான், சிவன், அம்மன் உள்ளட்ட அனைத்து மூர்த்தங்களும் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோவில் சுவர், வெளி வளாகம் அனைத்து இடங்களிலும் இறைவன், மகான்கள் சுதைகள் அழகிய வண்ணங்களில் வடிக்கப்பட்டுள்ளன.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

மன அமைதி வேண்டி, ஞானம் அருள, எதிர்மறை எண்ணங்கள் மறைய, வாழ்வு சிறக்க


நேர்த்திக்கடன்:

காவடி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்



ஞானம் தந்தருளும் மலேசியா (Malaysia) பிரிஞ்சாங் (Brinchang) தெண்டாயுதபாணி சுவாமியை மனக்கண்ணால் தரிசித்து பலன் பெற்றிடுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 631 மன அமைதி தந்தருளும் மலேசியா (Malaysia) பிரிஞ்சாங் (Brinchang) தெண்டாயுதபாணி சுவாமி


படம் 2 - 631 ஞானம் தந்தருளும் மலேசியா (Malaysia) பிரிஞ்சாங் (Brinchang) தெண்டாயுதபாணி சுவாமி கோவில் காவடி

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்