கோவில் 630 - மொரீசியஸ் (Mauritius) ட்ரையோலெட் (Triolet) முருகன் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                      தினம் ஒரு முருகன் ஆலயம்-630

தீவினைகள் அகற்றும் மொரீசியஸ் (Mauritius) ட்ரையோலெட் (Triolet) முருகன் கோவில்

28.2.2023 செவ்வாய்

அருள்மிகு முருகன் திருக்கோவில்

Bedassy Lane

ட்ரையோலெட் (Triolet)

பாம்பிள்மௌசஸ் மாவட்டம் (Pamplwmousses District)

மொரீசியஸ் (Mauritius)

இருப்பிடம்: தலைநகர் போர்ட் லுயீஸ் (Port Louis) 13 கிமீ, பாம்பிள்மௌசஸ் (Pamplwmousses) 9 கிமீ


மூலவர்: முருகன்

தேவியர்: வள்ளி, தெய்வானை

உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை


தலமகிமை:

ட்ரையோலெட் மொரீசியஸ் தீவின் வடக்கே பாம்பிள்மௌசஸ் மாவட்டத்தில் உள்ள நகரமாகும். மொரீசியஸ் தீவின் தலைநகர் போர்ட் லுயீஸிலிருந்து 13 கிமீ தொலைவில் ட்ரையோலெட் நகரில் முருகன் கோவில் கரும்பு வயல்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. பாம்பிள்மௌசஸ் நகரிலிருந்து 9 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிக்கொண்டிருக்கும் முருகப்பெருமான் மிகவும் ஆற்றல் மிக்கவராக அருள்பாலிக்கின்றார். இந்நகருக்கு இந்தியாவிலிருந்தும், ஆப்பிரிக்காவிலிருந்தும் தொழிலாளர்கள் குடிபெயர்ந்து வந்து பணிபுரிகிறார்கள்.


இக்கோவிலில் முருகபெருமானுக்குரிய அனைத்து திருவிழாக்களும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அவற்றில் முக்கியமாக தைப்பூசம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. தைப்பூச காவடி திருவிழா மிகவும் பிரமாண்டமாக நடக்கின்றது.


தல வரலாறு:

வேல்முருகன் என்ற தமிழ் தொழிலாளியின் ஆலோசனையின் படி இங்குள்ள தமிழ் முருக பக்தர்களால் 1907-ல் சிறப்பு மிக்க தென்னிந்திய கட்டிடக் கலை அமைப்பில் முருகன் கோவில் கட்டப்பட்டது.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் முருகப்பெருமான் நின்ற கோல்த்தில் வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் பொலிவுடன் அருள்கின்றார். விநாயகப்பெருமான் உட்பட அனைவரும் இத்திருத்தலத்தில் அருளுகின்றான்ர்.


திருவிழா:

தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கிருத்திகை


பிரார்த்தனை:

தீவினைகள் அகல, தொழில், விவசாயம் செழிக்க, நினைத்தது நடக்க


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திறக்கும் நேரம்:

காலை 6-12 மால 1-6


தொழில், விவசாயம் செழிக்க மொரீசியஸ் (Mauritius) ட்ரையோலெட் (Triolet) முருகனை கும்பிட்டு மகிழ்வோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 630 தீவினைகள் அகற்றும் மொரீசியஸ் (Mauritius) ட்ரையோலெட் (Triolet) முருகன்



படம் 2 - 630 தொழில், விவசாயம் செழிக்க மொரீசியஸ் (Mauritius) ட்ரையோலெட் (Triolet) முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்