கோவில் 628 - மொரீசியஸ் (Mauritius) பெல்லே வியூ மவுரல் (Belle Vue Maurel) பாலசுப்ரமணியர் கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                                                தினம் ஒரு முருகன் ஆலயம்-628

நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் மொரீசியஸ் (Mauritius) பெல்லே வியூ மவுரல் (Belle Vue Maurel) பாலசுப்ரமணியர் கோவில்

26.2.2023 ஞாயிறு

அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவில்

பெல்லே வியூ மவுரல் (Belle Vue Maurel)

ரிவர் டியூ ராம்பர்ட் மாவட்டம் (Riviere du Rampart District)

மொரீசியஸ் (Mauritius)

இருப்பிடம்: தலைநகர் போர்ட் லுயீஸ் (Port Louis) 22 கிமீ, Riviere du Rampart 7 கிமீ

மூலவர்: பாலசுப்ரமணியர்


தலமகிமை:

கந்த வேளை எந்த வேளையும் துதிப்போர்க்கு ஒரு நாளும் குறைவில்லை என்ற சொல்லுக்கேற்ப மொரீசியஸ் தலைநகர் போர்ட் லுயீஸிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள பெல்லே வியூ மவுரல் என்ற கிராமத்தில் முருகப்பெருமானுக்கென, பாலசுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கரும்பு தோட்டப் பகுதியில் உள்ளது, கிழக்கு கடற்கரையிலுள்ள பெல்லே வியூ மவுரல் பாலசுப்ரமணியர் கோவில், ரிவர் டியூ ராம்பர்ட் (Riviere du Rampart) மாவட்ட தலைநகரிலிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ளது.


இத்திருக்கோவிலில் சித்திரை காவடி திருவிழா 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியையொட்டி நடத்தப்படும் இவ்விழா கொடியேற்றத்துடன் தொடங்கி அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், சுவாமி உலா நடைபெறும், காவடி திருவிழா பிரதான நிகழ்வாகும். தைப்பூசம் திருவிழாவும் 10 நாட்கள் கொடியேற்றம், பாலாபிஷேகம், சங்கு பூஜை, சிறப்பு பூஜைகள், காவடி என வெகு விமரிசையாக நடக்கிறது. கந்த சஷ்டி விரதமும் 6 நாட்கள் அனுசரிக்கப்பட்டு, காவடி, சூரசம்ஹாரம் என தமிழ்நாட்டு முருகன் கோவில்கள் போல் சிறப்பாக நடைபெறும். கிருத்திகை, பவுர்ணமி விளக்கு பூஜை, வருஷாபிஷேகம் (ஆகஸ்ட்) ஆகியவை சிறப்பாக நடைபெற்று, அன்னதானம் மிகப்பெரிய அளவில் நடக்கும். இது போல அனைத்து இந்து பண்டிகைகளும் இக்கோவிலில் கொண்டாடப்படுகிறது

தல வரலாறு:

கரும்பு தோட்டம் பகுதியில் முருகப்பெருமானுக்கு இந்திய தொழிலாளர்களால் தென்னிந்திய கட்டிட கலை அமைப்பில் திருக்கோவில் கட்டப்பட்ட் 2003 ஆகஸ்ட் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2015 கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 30-ல் மீண்டும் நடைபெற்றது., 7-வது வருஷாபிஷேகம் 30.8.22 அன்று பூஜைகள், அன்னதானம் என சிறப்பாக நடைபெற்றது.


தல அமைப்பு:

திருக்கோவில் கருவறையில் முருகப்பெருமான், பாலசுப்ரமணியர் என்ற திருப்பெயருடன் கையில் வேல் ஏந்தி, இடக்கையை இடுப்பில் தாங்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகப்பெருமான், சிவபெருமான், பத்ரகாளி உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

மாரியம்மன்


திருவிழா:

சித்திரை காவடி (10 நாள்), தைப்பூசம்(10 நாள்), கந்த சஷ்டி (6 நாள்), வருஷாபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், கிருத்திகை, பவுர்ணமி, பொங்கல், மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, ஆடிப்பெருக்கு, ஆடிக்கஞ்சி, ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு


பிரார்த்தனை:

நேர்மறை அதிர்வுகள் பெற, எண்ணியது நிறைவேற. மன அமைதி பெற, தியான நிலை அடைய


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி எடுத்தல், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


எண்ணியது நிறைவேற அருளும் மொரீசியஸ் (Mauritius) பெல்லே வியூ மவுரல் (Belle Vue Maurel) பாலசுப்ரமணியரை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻



படம் 1 - 628 நேர்மறை அதிர்வுகளை உண்டாக்கும் மொரீசியஸ் (Mauritius) பெல்லே வியூ மவுரல் (Belle Vue Maurel) பாலசுப்ரமணியர்


படம் 2 - 628 எண்ணியது நிறைவேற அருளும் மொரீசியஸ் (Mauritius) பெல்லே வியூ மவுரல் (Belle Vue Maurel) பாலசுப்ரமணியர் கோவில் கொலு


Comments

Popular posts from this blog

கோவில் 609 - மலேசியா கெடா சுங்கை பெடானி சுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1056 - செங்கல்பட்டு எலப்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்