கோவில் 1042 - அரியலூர் சோழமாதேவி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1042 செல்வம் பெருக அருளும் அரியலூர் சோழமாதேவி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 15.4.2024 திங்கள் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM029158] சோழமாதேவி-612902 அரியலூர் மாவட்டம் இருப்பிடம்: அரியலூர் 41 கிமீ, தா.பழூர் 11 கிமீ, திருப்பனந்தாள் 14 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி தல மகிமை: அரியலூர் மாவட்டம் தலைநகரம் அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவில் இருக்கும் சோழமாதேவியில் செல்வம் பெருக அருளும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தா.பழூர் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ பிரயாணம் செய்தாலும், திருப்பனந்தாள் பேருந்து நிலையத்தில...