கோவில் 1037 - அரியலூர் ஆண்டிமடம் பழனியாண்டவர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1037
ஞானம் மேம்பட அருளும் அரியலூர் ஆண்டிமடம் பழனியாண்டவர் கோவில்
10.4.2024 புதன்
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவில்
முதலியார் தெரு
ஆண்டிமடம்-621801
அரியலூர் மாவட்டம்
இருப்பிடம்: ஆண்டிமடம் 1 கிமீ, அரியலூர் 49 கிமீ
மூலவர்: பழனியாண்டவர்
தல மகிமை:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் ஞானம் மேம்பட அருளும் சிறப்பு மிக்க பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலவர் பழனியாண்டவர் பழனி முருகனைப் போலவே ஆற்றலுடன் அருளாட்சி செய்கின்றார். அரியலூர் மாவட்டம் தலைநகரம் அரியலூர் நகரிலிருந்து 49 கிமீ தூரம் பிரயாணம் செய்தாலும் இத்திருத்தலத்தை அடையலாம். தைப்பூசம் உள்ளிட்ட திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு:
பழனி பாதயாத்திரை செல்ல முடியாத பக்தர்களுக்காவும், பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காவும் செங்குந்தர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதியில் பழனியாண்டவர் கோவில் எழுப்பப்பட்டது.
தல அமைப்பு:
கோவில் வாயிலில் அழகிய மயில் பழனியாண்டவரை நோக்கி உள்ளது. கருவறையில் மூலவர் பழனியாண்டவர் கையில் தண்டம் ஏந்தி பழனி மலை முருகனைப் போலவே திருக்காட்சி தந்து தேடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், காமாட்சி அம்மன் உட்பட அனைத்து தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
ஞானம் மேம்பட, தொழில், வியாபாரம் செழிக்க, கல்வி சிறக்க, குடும்ப ஒற்றுமை ஓங்க, ஆரோக்கியம் பெருக
நேர்த்திக்கடன்:
காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
தொழில், வியாபாரம் செழிக்க அருளும் அரியலூர் ஆண்டிமடம் பழனியாண்டவரை போற்றி வங்கிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment