கோவில் 1039 - அரியலூர் செந்துறை செல்வ சுப்பிரமணியர் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1039
வேண்டியதை எல்லாம் நிறைவேற்றும் அரியலூர் செந்துறை செல்வ சுப்பிரமணியர் கோவில்
12.4.2024 வெள்ளி
அருள்மிகு செல்வ சுப்பிரமணியர் திருக்கோவில்
[ஆறுபடை முருகன் கோவில்]
நெய்வனம்
செந்துறை-621714
அரியலூர் மாவட்டம்
இருப்பிடம்: அரியலூர் 500 மீ, அரியலூர் 21 கிமீ
மூலவர்: செல்வ சுப்பிரமணியர்
முக்கிய தெய்வங்கள்: ஆறுபடை முருகன் (6 தலங்கள் முருகப்பெருமான்)
உற்சவர்: முருகன் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
அரியலூர் மாவட்டத்தில் உள்ள செந்துறை பேருந்து நிலையத்திலிருந்து 500 மீ தூரத்தில் உள்ள நெய்வனத்தில் வேண்டியதை எல்லாம் நிறைவேற்றும் செல்வ சுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. அரியலூர் நகரம் இக்கோவிலில் இருந்து 21 கிமீ தொலைவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் அறுகோண வடிவில் ஆறுபடை வீட்டு முருகப்பெருமான் மூர்த்திகள் வீற்றிருப்பது சிறப்பு.
இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில் செல்வ சுப்பிரமணியருக்கு அபிஷேகங்கள், அலங்காரம், சிறப்பு தீபாரதனைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சியும், சுவாமி திருவீதியுலாவும் சிறப்பாக நடைபெறுகிறது. முருகப்பெருமானின் இதர திருவிழாக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறன.
தல வரலாறு:
மிகவும் பழமையான செந்துறை செல்வ சுப்பிரமணியர் கோவிலில் ஆறுபடை முருகப்பெருமான் சிலைகளையும் அறுகோண வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தல அமைப்பு:
அழகிய சிற்பங்களுடன் கூடிய இக்கோவிலில் மூலவராக செல்வ சுப்பிரமணியர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை தலங்களின் முருகப்பெருமானும் ஆறு தனி சந்நிதிகளில் வீற்றிருந்து ஆற்றலுடன் அருள்பாலிக்கின்றனர். பழனி முருகன் சந்நிதியில் பழனி திருத்தலத்தைப் போலவே முருகப்பெருமான் ஆண்டிக்கோலத்தில் மேற்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிப்பது கூடுதல் சிறப்பம்சம். மேலும் விநாயகர் உட்பட இதர தெய்வ மூர்த்தங்களும் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்
பிரார்த்தனை:
வேண்டியது நிறைவேற, மன நிம்மதி கிடைக்க, வியாபாரம் சிறக்க, திருமணம் கைக்கூட, குழந்தை பாக்கியம் கிட்ட, பிணிகள் அகல, தோஷங்கள் நீங்க
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
மன நிம்மதி தந்தருளும் அரியலூர் செந்துறை செல்வ சுப்பிரமணியர் திருவடிகள் பணிந்து தொழுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment