கோவில் 1041 - அரியலூர் காட்டுபிரிங்கியம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

 🙏🏻🙏🏻                                                                                                                     

தினம் ஒரு முருகன் ஆலயம்-1041 

நல்லன அருளும் அரியலூர் காட்டுபிரிங்கியம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் 

14.4.2024 ஞாயிறு


அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் 

காட்டுபிரிங்கியம்-621704

அரியலூர் மாவட்டம் 

இருப்பிடம்: அரியலூர் 8 கிமீ


மூலவர்: பாலதண்டாயுதபாணி சுவாமி


தல மகிமை:

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தலைநகரம் அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ள காட்டுபிரிங்கியம் எனும் ஊரில் நல்லன அருளும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. 22.8.2022-ல் இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


இக்கோவிலில் பங்குனி உத்திரம், தைப்பூசம், சித்ரா பௌர்ணமி, கந்த சஷ்டி திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கார்த்திகை, சஷ்டி திருநாட்களில் விசேஷ பூஜைகள் உண்டு.

 

தல வரலாறு:

இக்கோவில் மகா கும்பாபிஷேகம் 22.8.2022-ல் நடைபெற்றது.


தல அமைப்பு:

இக்கோவிலின் மதில் சுவர் மேல் அழகிய தெய்வ சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கருவறையில் முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக கையில் தண்டத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் விநாயகர், வள்ளி, தெய்வானை,  சிவபெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.    


திருவிழா:

பங்குனி உத்திரம், தைப்பூசம், சித்ரா பௌர்ணமி, கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி


பிரார்த்தனை:

நல்லன அருள, எண்ணியது நடக்க, கல்வி, ஞானம், தொழி சிறக்க, உடல் ஆரோக்கியம் வேண்டி 


நேர்த்திக்கடன்:

பால்குடம், காவடி, அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்


எண்ணியது நடக்க அருளும் அரியலூர் காட்டுபிரிங்கியம் பாலதண்டாயுதபாணி சுவாமி திருவடிகள் பணிந்து பிரார்த்திப்போம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


முருகாலய முரசு

Dr K. முத்துக்குமரன் Ph. D

9489302842

கோயம்புத்தூர் 25

🙏🏻🙏🏻


படம் 1 - 1041 நல்லன அருளும் அரியலூர் காட்டுபிரிங்கியம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்


படம் 2 - 1041 எண்ணியது நடக்க அருளும் அரியலூர் காட்டுபிரிங்கியம் பாலதண்டாயுதபாணி சுவாமி  கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ்





Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்