கோவில் 1042 - அரியலூர் சோழமாதேவி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1042
செல்வம் பெருக அருளும் அரியலூர் சோழமாதேவி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
15.4.2024 திங்கள்
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் [TM029158]
சோழமாதேவி-612902
அரியலூர் மாவட்டம்
இருப்பிடம்: அரியலூர் 41 கிமீ, தா.பழூர் 11 கிமீ, திருப்பனந்தாள் 14 கிமீ
மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
அரியலூர் மாவட்டம் தலைநகரம் அரியலூர் பேருந்து நிலையத்திலிருந்து 41 கிமீ தொலைவில் இருக்கும் சோழமாதேவியில் செல்வம் பெருக அருளும் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தா.பழூர் பேருந்து நிலையத்திலிருந்து 11 கிமீ பிரயாணம் செய்தாலும், திருப்பனந்தாள் பேருந்து நிலையத்திலிருந்து 14 கிமீ பிரயாணம் செய்தாலும் சோழமாதேவி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலை அடையலாம். 18.3.2022-ல் இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோவிலில் பங்குனி உத்திரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது, முருகப்பெருமானின் இதர திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறுகின்றன.
தல வரலாறு:
மிகவும் பழமையான இக்கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் 18.3.2022-ல் நடைபெற்றது. இத்திருக்கோவில் தற்போது இந்து அறநிலையத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் பாலசுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறைக்கு எதிலில் மயில் உள்ளது. மேலும் விநாயகப்பெருமான் உள்ளிட்ட தெய்வங்களும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், தைப்பூசம், சித்ரா பௌர்ணமி, கந்த சஷ்டி, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
செல்வம் பெருக, நினைத்தது நிறைவேற, குடும்பம் சிறக்க, மன அமைதி கிடைக்க, விவசாயம் செழிக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 10-12 மாலை 6-8
விவசாயம் செழிக்க அருளும் அரியலூர் சோழமாதேவி பாலசுப்பிரமணிய சுவாமியை போற்றி தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment