கோவில் 990 - திருவண்ணாமலை செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் சண்முகர்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-990 [திருப்புகழ் தலம்] வேண்டிய வரம் தரும் திருவண்ணாமலை செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவில் சண்முகர் 23.2.2024 வெள்ளி அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் [TM020430] திருப்புகழ் தலம் திருவத்திபுரம் செய்யாறு-604407 திருவண்ணாமலை மாவட்டம் இருப்பிடம்: வந்தவாசி 20 கிமீ, திருவண்ணாமலை 68 கிமீ, காஞ்சிபுரம் 30 கிமீ மூலவர்: வேதபுரீஸ்வரர், வேதநாதர் அம்பாள்: பால குஜாம்பிகை, இளமுலையம்பிகை திருப்புகழ் நாயகர்: சண்முகர் தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: பனைமரம் தீர்த்தம்: மானச தீர்த்தம், கல்யாண கோடி, திருக்குளம் புராணப்பெயர்கள்/வேறு பெயர்கள்: திருவோத்தூர், திருஓத்தூர், செய்யார், திருவத்திபுரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் (1), வள்ளலார், சிவபிரகாசர் தல மகிமை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து 20 கிமீ தொலைவில் இருக்கும் செய்யாறு திருத்தலத்தில் வேண்டிய வரம் தரும் வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையிலிருந்து 68 கிமீ அல்லது காஞ்சிபுரத்திலிருந்து 30 கிமீ பிரயாணம் செய்தாலும் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலை அடையலாம். இக்கோவிலில் ப...