Posts

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-80 திருமண வரம் தந்தருளும் சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 27.8.2021 வெள்ளி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குன்றத்தூர் சென்னை-600069 காஞ்சிபுரம் மாவட்டம் இருப்பிடம்: தாம்பரம் 16 கிமீ, சென்ட்ரல் 25 கிமீ, கோயம்பேடு 16 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வில்வ மரம் தீர்த்தம்: சரவணப்பொய்கை பாடியவர்கள்: அருணகிரிநாதர் தலமகிமை: சென்னை தாம்பரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் குன்றத்தூரில் உள்ள குன்று ஒன்றில் குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருத்தணிக்குத் தெற்கில் இருப்பதால், தென் தணிகை என்றும் அழைக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் முருகனைப் போல குன்றத்தூர் மூலவர் முருகப்பெருமானும் வட திசையைப் பார்த்து காட்சி தந்தருள்வது சிறப்பம்சம். மேலும், திருப்பரங்குன்றத்தில் பெருமான் தெய்வானையுடன் மட்டும் அருள்பாலிக்கின்றார். இத்திருத்தலத்தில், சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிப்பது சிறப்பு. அசுர சக்திகள் என்பவை மனிதர்களின் ஆன்மாவை மறைத்திருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களைக் குறிப்பவை. ...

கோவில் 445 - புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

🙏 🙏  தினம் ஒரு முருகன் ஆலயம்-445 கல்வி, ஞானம் பெருக அருளும் புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 27.8.2022 சனி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவில்பட்டி-614902 புதுக்கோட்டை மாவட்டம் இருப்பிடம்: புதுக்கோட்டை 54 கிமீ, தஞ்சாவூர் 22 கிமீ மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி என்ற தலத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பாலகனாய் அருள்பாலிக்கும் அழகன் பாலசுப்பிரமணிய சுவாமியை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு. மாணவர்களின் கண்கண்ட தெய்வம் இந்த முருகனை தரிஸ்த்து வேண்ட. தேர்வு சமயங்களில் மாணவர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையன், இங்கே வந்து தன்னை வணங்கும் மாணவர்களுக்கு கல்வி, ஞானம் பெருவும், பாடங்களில் தேர்ச்சி பெறவும் அருள்கின்றான். தேர்வு நேரங்களில் கூட்டமாக வரும் மாணவர்களே சாட்சி தல அமைப்பு: திருக்கோவில் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது அடுத்து மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடத்தால், கருவறையில் மூலவர் பாலசுப்ரமணியசு...

கோவில் 79 - தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-79 தீராத பிணிகள் தீர்க்கும் தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் 26.8.2021 வியாழன் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி (இராஜேந்திர சோழீஸ்வரர்) திருக்கோவில் பெரியகுளம்-625601 தேனி மாவட்டம் இருப்பிடம்: தேனியிலிலிருந்து 15 கிமீ மூலவர்: இராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்) தாயார்: அறம் வளர்த்த நாயகி நாயகர்: பாலசுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம் தலமகிமை: தேனி நகரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள பெரியகுளம் நகரின் மையப்பகுதியில் பாலசுப்பிரமணிய சுவாமி குடிகொண்டிருக்கும் இராஜேந்திர சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் தேனி மாவட்டத்தில் அமைந்த பெரிய கோவில். இங்கு மூலவர் சிவபெருமானாக இருந்தாலும், முருகப்பெருமான்தான் பிரசித்தி. எனவே இக்கோவிலை பாலசுப்பிரமணிய சுவாமியர் கோவில் என்றால்தான் பக்தர்களுக்கு தெரியும். முருகப்பெருமானின் சிலையானது பூமியைத் துளைத்து கட்டப்பட்டிருக்கிறது. ஆறுமுகங்களையுடைய முருகப்பெருமான், வள்ளி தெய்வானை சமேதராக அருள்பாலிக்கின்றார். இந்தக் கோவிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் இரு...

கோவில் 444 - செங்கல்பட்டு மாவட்டம் முத்திகைநல்லான்குப்பம் முத்துகுமார சுவாமி கோவில்

Image
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-444 கல்வி, ஞானம் சிறக்க அருளும் செங்கல்பட்டு மாவட்டம் முத்திகைநல்லான்குப்பம் முத்துகுமார சுவாமி கோவில் 26.8.2022 வெள்ளி அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோவில் முத்திகைநல்லான்குப்பம்-603109 திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு மாவட்டம் இருப்பிடம்: திருக்கழுக்குன்றம் 4 கிமீ மூலவர்: முத்துகுமார சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: திருக்கழுகுன்றத்திருந்து 4 கிமீ தொலைவில் உள்ள முத்திகைநல்லான்குப்பத்தில் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மலை மீது அமைந்துள்ளது. திருக்கழுக்குன்றத்திலிருந்து அம்மணம்பாக்கம் வழியாகவும் இந்தக் கோவிலுக்கு செல்லலாம். வள்ளி, தெய்வானையுடன் உள்ள முத்துக்குமாரசாமியை வேண்டினால் திருமணம் விரைவில் கைகூடுவதாக நம்பப்படுகிறது. திருத்தணி முருகன், திருப்போரூர் முருகன் கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள முருகனை சென்று வழிபடலாம். கிருத்திகை சஷ்டி இங்கு விசேஷம். இங்கிருந்து பார்த்தால், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவில் தெரிவது மேலும் சிறப்பம்சம். மலைக்கு 50 அடி தூரத்தில் தியான மண்டபம், திருமண மண்டபம் உ...

கோவில் 443 - கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Image
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-443 கடன் பிரச்னைகளை தீர்க்கும் கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவில் 25.8.2022 வியாழன் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கீரப்பாளையம்-608602 சிதம்பரம் வட்டம் கடலூர் மாவட்டம் இருப்பிடம்: சிதம்பரம்- சேத்தியாதோப்பு சாலையில் 7 கிமீ மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் சிதம்பரம்-சேத்தியாதோப்பு சாலையில் 7 கிமீ தொலைவில் உள்ள கீரப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்ற திருப்பெயருடன் வள்லி, தெய்வானை சமேதராக எழுந்தருளியுள்ளார். பங்குனி உத்திரம் இருநாள் உற்சவமாக நடைபெறும். முதல் நாள் திருக்கல்யாணம், இரவு வீதியுலா நடைபெறும். இரண்டாம் நாள் காலை காவடிகள், சுவாமி உலாவும், மதியம் மகா அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும், தொடர்ந்து அன்னதானமும் இடும்பன் பூஜையும் நடைபெறும். வைகாசி விசாகம், தைப்பூசத்தம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் சிறப்பாக நடைபெறும். மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று அருட்பிரகாச வள்ளலார் சந்நிதி முன்னால் ...

கோவில் 442 - குகன் (முருகப்பெருமான்) வழிபட்ட கன்யாகுமரி குகநாதீஸ்வரர் கோவில்

Image
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-442 பிரதோஷ நன்னாளில் குகன் (முருகப்பெருமான்) வழிபட்ட கன்யாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் 24.8.2022 புதன் அருள்மிகு குகநாதீஸ்வரர் திருக்கோவில் கன்யாகுமரி-629702 கன்யாகுமரி மாவட்டம் இருப்பிடம்: கன்னியாகுமரி ரயில்நிலையத்திலிருந்து100 மீ மூலவர்: குகநாதீஸ்வரர், கோனாண்டேஸ்வரன், குகனாண்டேஸ்வரன் அம்பாள்: பார்வதி நாயகர்: குகன் (முருகப்பெருமான்) தேவியர்: வள்ளி, தெய்வானை தல விருட்சம்: வில்வமரம் தலமகிமை: கன்னியாகுமரி ரயில்நிலையம் அருகில் (100 மீ) மரங்களும் செடிகளும் நிறைந்த ரம்மியமான சூழலில் அருள்மிகு குகநாதீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலின் இறைவன் கோனாண்டேஸ்வரன் என்றும், குகனாண்டேஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார். இருப்பினும், இக்கோவில் கருவறை குகை போன்று அமைத்துள்ளதாலும், பிராகாரம் குறுகியிருப்பதாலும், குகநாதீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். இறைவி பார்வதி. கோவில் தலவிருட்சம் வில்வமரம். குமரி மாவட்டத்திலேயே மிக உயரமான சிவலிங்கம் இந்தத் திருக்கோவிலில்தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து புதராகக் காட்சியளித்த இக்கோவ...

கோவில் 78 - திண்டுக்கல் மாவட்டம் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில்

Image
🙏 🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-78 பாவ வினைகளை அகற்றிடும் திண்டுக்கல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் 25.8.2021 புதன் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோவில் பூம்பாறை 624103 கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம் இருப்பிடம்: கொடைக்கானலிலிருந்து 20 கிமீ மூலவர்: குழந்தை வேலப்பர் பழைமை: 3000 ஆண்டுகள் பழைமை பாடியவர்: அருணகிரிநாதர் தலமகிமை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலிருந்து 20 கிமீ தொலைவில் பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோவில் (குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில்) மூன்றாயிரம் ஆண்டுகள் பழைமையானது. இக்கோவில் சிலையானது போகர் என்னும் சித்தரால் நவபாஷானத்தில் (இரண்டாவது நவபாஷண சிலை) உருவாக்கப்பட்டது. இந்த கோவில் பழனி தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது. இந்த தேதியில், இந்த நேரத்தில் வர வேண்டும் என்று இந்த முருகப்பெருமான் நினைத்தால்தான் நாம் வந்து தரிசிக்க முடியும். ஒவ்வொரு வருடமும் பூம்பாறை குழந்தை வேலப்பருக்கு தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்திற்குப் பிறகு வரும் கேட்டை நட்சத்திரத்தன்று விழா நடைபெறுகிறது. தன்னை வழிபடும் பக்தர்களின் பாவ வினைகளை குழந்தை வேலப்பர் தீர்த்து அருள்பாலி...