கோவில் 445 - புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

🙏🙏

 தினம் ஒரு முருகன் ஆலயம்-445

கல்வி, ஞானம் பெருக அருளும் புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

27.8.2022 சனி

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

கோவில்பட்டி-614902

புதுக்கோட்டை மாவட்டம்

இருப்பிடம்: புதுக்கோட்டை 54 கிமீ, தஞ்சாவூர் 22 கிமீ


மூலவர்: பாலசுப்பிரமணிய சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி என்ற தலத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. பாலகனாய் அருள்பாலிக்கும் அழகன் பாலசுப்பிரமணிய சுவாமியை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகு.


மாணவர்களின் கண்கண்ட தெய்வம் இந்த முருகனை தரிஸ்த்து வேண்ட. தேர்வு சமயங்களில் மாணவர்கள் கூட்டம் நிறைந்திருக்கும். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையன், இங்கே வந்து தன்னை வணங்கும் மாணவர்களுக்கு கல்வி, ஞானம் பெருவும், பாடங்களில் தேர்ச்சி பெறவும் அருள்கின்றான். தேர்வு நேரங்களில் கூட்டமாக வரும் மாணவர்களே சாட்சி


தல அமைப்பு:

திருக்கோவில் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது அடுத்து மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடத்தால், கருவறையில் மூலவர் பாலசுப்ரமணியசுவாமி கருணை ததும்பும் திருமுகத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார் மூலவரின் வலதுபுறம் துர்க்கையும், இடது புறம் ஐயப்பனும் தனிச் சந்நிதிகளில் அருள்கின்றனர் மகா மண்டபத்தில் விநாயகர்; நாகர், இடும்பர் திருமேனிகள் உள்ளன. திருச்சுற்றில் பஞ்சலிங்கம், ஆஞ்சனேயர், ராகு, கேது ஆகியோர் தரிசனம் கிட்டுகிறது. கோவில் நுழைவாயிலின் வலதுபுறம் சிவபெருமான் பார்வதி பிரம்மாவின் சுதைத் திருமேனிகள் காணப்படுகின்றன


பங்குனி உத்திரம், சித்திரைத் திருவிழா வைகாசி விசாகம் என வருடந்தோறும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. நல்ல கல்வி பெற வேண்டியும், படித்த பின் நல்ல வேலை கிடைக்க வேண்டியும் வேண்டும் மாணவர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைப்பதில் இந்த பாலசுப்ரமணிய சுவாமிக்கு நிகரில்வை என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பக்தர்கள


திருவிழா:

சித்திரை திருவிழா, பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி,


பிரார்த்தனை

கல்வி, ஞானம் பெருக, தேவில் தேர்ச்சி பெற, வேலை வாய்ப்பு வேண்டி


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள்


வேலை வாய்ப்பு நல்கும் புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டி பாலசுப்பிரமணிய சுவாமியை போற்றி வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏





Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்