கோவில் 444 - செங்கல்பட்டு மாவட்டம் முத்திகைநல்லான்குப்பம் முத்துகுமார சுவாமி கோவில்

🙏🙏

தினம் ஒரு முருகன் ஆலயம்-444

கல்வி, ஞானம் சிறக்க அருளும் செங்கல்பட்டு மாவட்டம் முத்திகைநல்லான்குப்பம் முத்துகுமார சுவாமி கோவில்

26.8.2022 வெள்ளி

அருள்மிகு முத்துகுமார சுவாமி திருக்கோவில்

முத்திகைநல்லான்குப்பம்-603109

திருக்கழுக்குன்றம்

செங்கல்பட்டு மாவட்டம்

இருப்பிடம்: திருக்கழுக்குன்றம் 4 கிமீ


மூலவர்: முத்துகுமார சுவாமி

தேவியர்: வள்ளி, தெய்வானை


தலமகிமை:

திருக்கழுகுன்றத்திருந்து 4 கிமீ தொலைவில் உள்ள முத்திகைநல்லான்குப்பத்தில் முத்துக்குமாரசாமி மலைக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் மலை மீது அமைந்துள்ளது. திருக்கழுக்குன்றத்திலிருந்து அம்மணம்பாக்கம் வழியாகவும் இந்தக் கோவிலுக்கு செல்லலாம். வள்ளி, தெய்வானையுடன் உள்ள முத்துக்குமாரசாமியை வேண்டினால் திருமணம் விரைவில் கைகூடுவதாக நம்பப்படுகிறது.


திருத்தணி முருகன், திருப்போரூர் முருகன் கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் இங்குள்ள முருகனை சென்று வழிபடலாம். கிருத்திகை சஷ்டி இங்கு விசேஷம். இங்கிருந்து பார்த்தால், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவில் தெரிவது மேலும் சிறப்பம்சம். மலைக்கு 50 அடி தூரத்தில் தியான மண்டபம், திருமண மண்டபம் உள்ளன. திருமணம், காதுகுத்தல் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


தல அமைப்பு:

மலையடிவாரத்தில் தேவி கருமாரியம்மனை வணங்கி மலை ஏற வேண்டும். அங்கிருந்து படி ஏறுகையில் மயில் சிற்பம் உள்ளது: அடிவாரத்திலிருந்து சுமார் 200 படிக்கட்டுக்கள் அமைந்துள்ளது. கருவறையில் முருகப்பெருமான், முத்துகுமாரசுவாமி என்ற திருப்பெயருடன் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முருகர் கோயிலுக்கு பின்னால் பெருமாள் கோயிலும் அடிவாரத்திலும் பெரிய குளமும் அமைக்க உள்ளார்களாம்.

திருவிழா:

பங்குனி உத்திடம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கிருத்திகை, சஷ்டி


பிரார்த்தனை

திருமணம் விரைவில் நடைபெற, குழந்தைவரம் வேண்டி, கல்வி, ஞானம் சிறக்க


நேர்த்திக்கடன்:

அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்


திருமணம் விரைவில் நடைபெற அருளும் செங்கல்பட்டு மாவட்டம் முத்திகைநல்லான்குப்பம் முத்துகுமார சுவாமியை அடி பணிந்து வணங்குவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

🙏🙏



படம் 1 - கல்வி, ஞானம் சிறக்க அருளும் செங்கல்பட்டு மாவட்டம் முத்திகைநல்லான்குப்பம் முத்துகுமார சுவாமி


படம் 2 -  திருமணம் விரைவில் நடைபெற அருளும் செங்கல்பட்டு மாவட்டம் முத்திகைநல்லான்குப்பம் முத்துகுமார சுவாமி கோவில்


Comments

Popular posts from this blog

கோவில் 1341 - சேலம் பள்ளப்பட்டி பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில்

கோவில் 84 - ராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் ரணபலி முருகன் கோவில்

கோவில் 80 - சென்னை குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்