கோவில் 510 - சென்னை திருவேற்காடு கல்யாண முருகன் கோவில்
🙏🙏 தினம் ஒரு முருகன் ஆலயம்-510 சஷ்டியின் 7-வது நாள் திருக்கல்யாண நாளன்று திருமண வரமருளும் சென்னை திருவேற்காடு கல்யாண முருகன் கோவில் 31.10.2022 திங்கள் அருள்மிகு கல்யாண முருகன் திருக்கோவில் திருவேற்காடு சென்னை-600077 இருப்பிடம்: கோயம்பேடு 10 கிமீ, சென்ட்ரல் 18 கிமீ மூலவர்: கல்யாண முருகன் தேவியர்: வள்ளி, தெய்வானை தலமகிமை: சென்னை மாநகரில் கோயம்பேட்டிலிருந்து 10 கிமீ தொலைவில் சிறப்பு மிக்க திருவேற்காடு கருமாரியம்மன் குடியிருக்கும் தலத்தில் திருமண வரமருளும் சென்னை திருவேற்காடு பேருந்து நிலையம் அருகில் கல்யாண முருகன் கோவில் அமைந்துள்ளது சிறப்பு. பங்குனி உத்திரம் சிறப்பு திருவிழாவாக நடைபெறுகிறது. ஹோமம், யாகம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாரதனைகள், தேவியருடன் சுவாமி திரு வீதிஉலா என் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த பங்குனி உத்திர திருநாளன்று உற்சவ மூர்த்திகளான முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை சிறப்பாக் பிரதிஷ்டை செய்யப்பட்டன். முருகப்பெருமானின் அனைத்து விசேஷங்களும் நடைபெறுகிறது. சிறப்பு வாய்ந்த திருவேற்காடு கருமாரியம்மன் மற்றும் திருப்புகழ் தலமான திருவேற்காட...