கோவில் 507 - மலேசியா பஹாங் குவாந்தன் முருகன் கோவில்
🙏🙏
தினம் ஒரு முருகன் ஆலயம்-507
சஷ்டியின் 4வது நாளில் ஆன்மீக அதிர்வலைகளை அதிகரிக்கும் மலேசியா பஹாங் குவாந்தன் முருகன் கோவில்
28.10.2022 வெள்ளி
அருள்மிகு குவாந்தன் முருகன் திருக்கோவில்
Jalan Bukit UBI-25200
குவாந்தன் மாவட்டம் (Kuantan)
பஹாங் மாநிலம் (Pahang)
மலேசியா (Malaysia)
இருப்பிடம்: குவாந்தன் 7 கிமீ
மூலவர்: முருகன்
பழமை: 55 ஆண்டுகள்
தலமகிமை:
மலேசியாவின் பஹாங் மாநிலத்தில் உள்ள குவாந்தன் மாவட்டத்தில் குவாந்தன் நகரிலிருந்து 7 கிமீ தொலைவில் குவாந்தன் முருகன் கோவில் அமைந்துள்ளது. வைகாசி விசாகம் 10 நாட்கள், கந்த சஷ்டி 6 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இந்தத் திருவிழாக்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு முருகன் அருள் பெற்று செல்கின்றனர்.
புதிய வளாகத்தில் தேவாரம் முதலான சமய வ்குப்புகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நூலகம் ஆரம்பிக்கப்பட உள்ளது. கலாசார மையம் ஏரற்படுத்துப்பட உள்ளது/
தலவராறு:
குவாந்தன் முருகன் கோவில் 1967-ம் ஆண்டு கட்டப்பட்டது. எனினும் 1982-ம் ஆண்டில்தான் கோவில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. குவாந்தான் இந்து சமூகத்திற்கு 40 ஆண்டுகள் வழிபாட்டுத் தலத்துடன் சேவை செய்து வந்த பிறகு, அரசு ஒதுக்கிய நிலத்திற்கு இடமாற்றம் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.. புதிய கோவிலை கட்ட போதுமான நிதியைத் திரட்ட வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தெய்வீக காரியத்திற்கு தாராளமாக பங்களிக்க இந்து சமூகத்தின் அன்பான ஆதரவை ஆலய நிர்வாகக்குழு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது. மேலும் விவரங்களுக்கு எங்கள் மாற்று வலைத்தளம் http://www.kaumaram.com/aalayam/kuantan/ ஐப் பார்வையிடவும்
தல அமைப்பு:
இந்துக்கள் அதிகம் வருகை புரியம் கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் பாலகன் வடிவில் அழகு ததும்ப வேல் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் உபமூர்த்திகளும் கோவிலில் எழுந்தருளியத்து சிறப்பு.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம்
பிரார்த்தனை:
கேட்டது நிறைவேற, ஆன்மீக அதிர்வுள் உண்டாக, தோஷங்கள் விகிட
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், அன்னதானம்
திறக்கும் நேரம்:
காலை 6-9 மாலை 5.30-9
சஷ்டியின் 4-வது நாளில் கேட்டது நிறைவேற மலேசியா பஹாங் குவாந்தன் முருகனை தொழுதிடுவோம்!
வேலும் மயிலும் துணை கேட்டது நிறைவேற !
திருச்சிற்றம்பலம்!
Dr K. முத்துக்குமரன் Ph. D
கோயம்புத்தூர் 25
🙏🙏
படம் 1 - 507 ஆன்மீக அதிர்வலைகளை அதிகரிக்கும் மலேசியா பஹாங் குவாந்தன் முருகன்
படம் 2 - 507 கேட்டது நிறைவேற மலேசியா பஹாங் குவாந்தன் முருகனை தொழுதிடுவோம்
Comments
Post a Comment