கோவில் 505 - இந்தோனேசியா லங்காட் முருகன் கோவில்

 🙏🙏   

தினம் ஒரு முருகன் ஆலயம்-505

சஷ்டியின் 2-வது நாளில் வெளிநாடுகளில் 2-வது உயரமான முருகன் அருளும் இந்தோனேசியா லங்காட் முருகன் கோவில்

26.10.2022 புதன்

அருள்மிகு முருகன் திருக்கோவில்

படாங் செர்மின் (Padang Cermin)

லங்காட் (Langat Regency)

வடக்கு சுமத்ரா (North sumathra)-20762

இந்தோனேசியா (Indonesia)

இருப்பிடம்: மேடன் நகரம் (Medan City) 35 கிமீ, லங்காட் (Langat Regency) 56 கிமீ

மூலவர்: முருகன் [50 அடி உயரம்)


தலமகிமை:

இந்தோனேசியா லங்காட் பிராந்தியத்தில் மேடன் நகரிலிருந்து 35 கிமீ தொலைவில் படாங் செர்மின் கிராமத்தில் வெளிநாடுகளில் 2-வது உயரமான 50 அடி முருகன் கோவில் ராஜ ராஜேஸ்வரி கோவிலில் சிறப்புற அமைந்துள்ளது. உலகிலேயே உயரமான 146 அடி உயர முருகன் சிலை சேலம் மாநகரில் முத்துமலை முருகன் என்பது சிறப்பு. வெளிநாடுகளில் மிக உயரமான முருகன் சிலை மலேசியா பத்துமலை முருகன் என்பது அதிசிறப்பு. இவரது உயரம் 140 அடி ஆகும்.


இந்தத் திருத்தலத்தின் தனிச்சிறப்பு தமிழ் முருக பக்தர்கள், இந்திய பக்தர்கள் மட்டுமின்றி ஜாவானியர்கள், படாக், ஜமா பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் மத வேற்றுமையின்றி முருகன் கோவிலுக்கு வந்து வணங்கி பயன்பெற்று செல்கின்றனர். இந்த கோவில் வளாகத்தில் ஒரு மயில் தங்குமிடம் உள்ளது. இங்கு 3 அழகான மயில்கள் இருக்கின்றன என்பது சிறப்பம்சம். இந்தோனேசியாவில் 2-வது உயரமான முருகன் சிலை தேவ முருகன் சிலை ஆகும்.

தலவராறு:

லங்காட் பிராந்தியத்தில் உள்ள முருகன் முருகன் சிலை 2012-ல் இந்தியாவில் இருந்து நேரடி சிற்பிகள் வரவழைக்கப்பட்டு கட்டப்பட்டது என்பது சிறப்பம்சம். எல்லா பொருட்களும் வெளி நாட்டில் இருந்து வந்தவை ஆகும். மலேசியாவில் உள்ள பத்து குகையில் சிலை செய்வதற்கும் இதே பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.


தல அமைப்பு:

ராஜ ராஜேஸ்வரி கோவில் வளாகத்தில் 50 அடி உயரத்தில் முருகப்பெருமான் சிலை கையில் வேல் ஏந்தியவாறு பிரம்மாண்டமாக விசுவரூப தரிசன காட்சி அளித்து இந்து மதம் மட்டுமல்லாமல் அனைவருக்கும் அருள்பாலிக்கின்றார். சக்தி வாய்ந்த ராஜ ராஜேஸ்வரி அம்மன் மிகுந்த பொலிவுடன் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.


.திருவிழா:

முருகனுக்குரிய அனைத்து விசேஷங்கள்


பிரார்த்தனை:

வேண்டியவை நிறைவேற,


நேர்த்திக்கடன்:

சிறப்பு பூஜைகள்


திறக்கும் நேரம்:

காலை முதல் மாலை வரை


சஷ்டியின் 2-வது நாளில் வேண்டியவை நிறைவேற அருளும் இந்தோனேசியா லங்காட் முருகனை வனங்கி அனைத்து பலன்கள் பெறுவோம்!


வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!


Dr K. முத்துக்குமரன் Ph. D

கோயம்புத்தூர் 25

 🙏🙏   






படம் 1 - 505 சஷ்டியின் 2-வது நாளில் வெளிநாடுகளில் 2-வது உயரமான முருகன் அருளும் இந்தோனேசியா லங்காட் முருகன்


படம் 2 - 505 வேண்டியவை நிறைவேற அருளும் இந்தோனேசியா லங்காட் முருகன்

Comments

Popular posts from this blog

கோவில் 1319 - சேலம் மல்லிகுந்தம் சின்ன பழனியாண்டவர் கோவில்

கோவில் 316 - சென்னை தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

கோவில் 1201 - கொழும்பு மாண்புமிகு பண்டாரநாயக்க மாவத்தை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில்