கோவில் 1020 - கேரளா எர்ணாகுளம் இளங்குந்தபுழா சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻 🙏🏻 தினம் ஒரு முருகன் ஆலயம்-1020 வரங்களை அள்ளி வழங்கும் கேரளா எர்ணாகுளம் இளங்குந்தபுழா சுப்பிரமணிய சுவாமி கோவில் 24.3.2024 ஞாயிறு அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இளங்குந்தபுழா [Elankunnpuzha]-682503 எர்ணாகுளம் மாவட்டம் [Ernakulam District] கேரளா மாநிலம் [Kerala] இருப்பிடம்: ஏர்ணாகுளம் 14 கிமீ தொலைபேசி எண்: 0484-2369007, 2369196 மூலவர்: சுப்பிரமணிய சுவாமி தல மகிமை: கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எர்ணாகுளம் மாநகரிலிருந்து 14 கிமீ தொலைவில் இருக்கும் இளங்குந்தபுழா பகுதியில் வரங்களை அள்ளி வழங்கும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கொச்சி நகருக்கருகில் இருக்கும் இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி அருளாட்சி செய்கின்றார். இக்கோவிலை கேரளாவின் திருச்செந்தூர் கோவில் என்றழைக்கின்றனர். இக்கோவிலில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருச்செந்தூர் கோவிலின் பழைய மூலவர் சுப்பிரமணிய சுவாமியே என்று இப்பகுதி பக்தர்கள் கூறுகின்றனர். இத்திருத்தலத்தில் கந்த சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை, சஷ்டி திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தல வரலாறு: கோவிலில் வழ...