கோவில் 1014 - ஈரோடு பாசூர் காந்தமலை பாலமுருகன் கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1014
கோரிக்கைககளை நிறைவேற்றும் ஈரோடு பாசூர் காந்தமலை பாலமுருகன் கோவில்
18.3.2024 திங்கள்
அருள்மிகு காந்தமலை பாலமுருகன் திருக்கோவில்
பாசூர்-638154
ஈரோடு மாவட்டம்
இருப்பிடம்: ஈரோடு 24 கிமீ
மூலவர்: பாலமுருகன்
தல மகிமை:
ஈரோடு மாவட்டம் ஈரோடு நகரிலிருந்து ஈரோடு-கரூர் சாலையில் 22 கிமீ தொலைவில் இருக்கும் சோளங்காபாளையத்தில் இறங்கி, கிழக்கு திசையில் மேலும் 2 கிமீ பிராயணித்தால் வரும் பாசூர் கிராமத்தில் உள்ள காந்தமலை எனும் சிறு குன்றில் கோரிக்கைககளை நிறைவேற்றும் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. மூலவர் பாலமுருகனுடன், சிவபெருமான், பெருமாள், பிரம்மா மூவரும் இக்கோவிலில் வீற்றிருந்து அருள்வதால் இத்தலம் மும்மூர்த்திகள் தலம் என்றும் சிறப்பு பெயர் பெற்றது. சித்தர் வாழ்ந்த தலம் எனும் பெருமை பெற்றது.
இக்கோவில் பாலமுருகனை வழிபடுவோருக்கு கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. திருமணம் நடைபெறும், குழைந்தை பாக்கியம் கிடைக்கும் இத்திருத்தலத்தில் கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. கோரிக்கை நிறைவேறியவர்கள் சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
தல வரலாறு:
வேல் சித்தர் என்ற மகான் இக்கோவிலை பராமரித்து வந்ததாக சொல்கின்றனர். தற்போது 30 வருடங்களாக பாசூர் செல்வராஜ் என்ற முருக பக்தர் கோவிலின் அனைத்து விழாக்களையும் முன்னின்று சிறப்பாக நடத்தி வருகிறார்.
தல அமைப்பு:
இக்கோவில் கருவறையில் மூலவர் பாலமுருகன் புன்னகை ததும்ப கருணை வடிவுடன் நின்ற கோலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். எதிரே பலிபீடம், மயில் சிலை உள்ளன. மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சிவபெருமான் (பாதேஸ்வரன்), அம்பாள், பெருமாள், பிரம்மா, ஐயப்பன், பைரவர், நவக்கிரகங்கள் உட்பட அனைத்து தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
பங்குனி உத்திரம், கந்த சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
கோரிக்கைககள் நிறைவேற, திருமண வரம் வேண்டி, குழந்தை பாக்கியம் பெற, சகல செல்வங்கள் கிடைக்க, உடல் நலன் வேண்டி
நேர்த்திக்கடன்:
பால்குடம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல். அன்னதானம்
சகல செல்வங்கள் கிடைக்க அருளும் ஈரோடு பாசூர் காந்தமலை பாலமுருகன் மனக்கண்ணால் தரிசித்து பயன்பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
படம் 1 - 1014 கோரிக்கைகளை நிறைவேற்றும் ஈரோடு பாசூர் பாலமுருகன்
படம் 2 - 1014 சகல செல்வங்களும் கிடைக்க அருளும் ஈரோடு பாசூர் பாலமுருகன்
Comments
Post a Comment