கோவில் 1020 - கேரளா எர்ணாகுளம் இளங்குந்தபுழா சுப்பிரமணிய சுவாமி கோவில்
🙏🏻🙏🏻
தினம் ஒரு முருகன் ஆலயம்-1020
வரங்களை அள்ளி வழங்கும் கேரளா எர்ணாகுளம் இளங்குந்தபுழா சுப்பிரமணிய சுவாமி கோவில்
24.3.2024 ஞாயிறு
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
இளங்குந்தபுழா [Elankunnpuzha]-682503
எர்ணாகுளம் மாவட்டம் [Ernakulam District]
கேரளா மாநிலம் [Kerala]
இருப்பிடம்: ஏர்ணாகுளம் 14 கிமீ
தொலைபேசி எண்: 0484-2369007, 2369196
மூலவர்: சுப்பிரமணிய சுவாமி
தல மகிமை:
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எர்ணாகுளம் மாநகரிலிருந்து 14 கிமீ தொலைவில் இருக்கும் இளங்குந்தபுழா பகுதியில் வரங்களை அள்ளி வழங்கும் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கொச்சி நகருக்கருகில் இருக்கும் இக்கோவிலில் சுப்பிரமணிய சுவாமி அருளாட்சி செய்கின்றார்.
இக்கோவிலை கேரளாவின் திருச்செந்தூர் கோவில் என்றழைக்கின்றனர். இக்கோவிலில் வீற்றிருக்கும் சுப்பிரமணிய சுவாமி திருச்செந்தூர் கோவிலின் பழைய மூலவர் சுப்பிரமணிய சுவாமியே என்று இப்பகுதி பக்தர்கள் கூறுகின்றனர். இத்திருத்தலத்தில் கந்த சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை, சஷ்டி திருநாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
தல வரலாறு:
கோவிலில் வழிபடப்படும் சுப்பிரமணியசுவாமி சிலை புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலின் பழைய மூர்த்தியாக நம்பப்படுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலின் பழமையான மூர்த்தி சேதமடைந்ததால், அதற்கு பதிலாக புதிய மூர்த்தி அமைக்கப்பட்டதாக திருச்செந்தூர் புராணம் கூறுகிறது. பழைய மூர்த்தி கடலில் வீசப்பட்டதாகவும். பழைய விக்ரஹம் கடலில் மிதந்து இளங்குந்தபுழாவை (எலம்குன்னப்புழா) அடைந்தது, அது கோரைகள் நிறைந்த வனப்பகுதியில் இருந்து ஒரு புலையப் பெண்ணால் மீட்டெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையிலும், புலையர் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், தினமும் சீவேலியின் போது பூலாத்துடி என்ற இசைக்கருவி இசைக்கப்படுகிறது.
தல அமைப்பு:
இக்கோவில் கேரள பாணி கட்டிடக்கலையின் படி கட்டப்பட்டது. இக்கோவிலில் சுத்தம்பலம், நமஸ்கார மண்டபம், கொடிமரம், இரண்டு மாடி சதுர கோவில் ஆகியவை உள்ளன. கருவறையில் மூலவராக சுப்பிரமணிய சுவாமி ஆஜானுபாவராக கையில் வேலேந்தி அழகு தரிசனம் தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். கருவறையின் வெளிப்புற சுவர்களில் அழகிய ஓவியங்கள் சிறப்புற அமைந்துள்ளன. மேலும் கணபதி, சிவபெருமான், சாஸ்தா ஐயப்பன் உள்ளிட்ட தெய்வங்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கார்த்திகை, சஷ்டி
பிரார்த்தனை:
வரங்கள் வேண்டி, செல்வம் செழிக்க, திருமணம் நடைபெற, குழந்தை வேண்டி, தோஷங்கள் நீங்க, குடும்ப வாழ்வு சிறக்க
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல்
திறக்கும் நேரம்:
காலை 5-9 மாலை 5-8
செல்வம் செழிக்க அருளும் கேரளா எர்ணாகுளம் இளங்குந்தபுழா சுப்பிரமணிய சுவாமி மனக்கண்ணால் தரிசித்து பயன்பெறுவோம்!
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்!
முருகாலய முரசு
Dr K. முத்துக்குமரன் Ph. D
9489302842
கோயம்புத்தூர் 25
🙏🏻🙏🏻
Comments
Post a Comment